Download App

Santhanam now a proud hotelier (தமிழ்)

Published by indiaglitzcom

ஓட்டல் அதிபரான சந்தானம்


காமெடி நடிகர் சந்தானம் ஓட்டல் அதிபராக மாறிவிட்டாரா… இருக்காதா நிற்க நேரம் இல்லாமல் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் சந்தானம் ஓட்டல் அதிபராவது ஒன்றும் புதுசில்லை என்கிறீர்களா… 



நிஜத்தில் சந்தானம் ஓட்டல் வைத்திருக்கிறாரா என்பதெல்லாம் அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்… ?பட்டத்துயானை? படத்தில் சந்தானம் ஓட்டல் அதிபராக வருகிறார். அந்த ஓட்டலில் விஷால் வேலை செய்கிறார்.




?மலைக்கோட்டை? படத்தின் வெற்றிக்கு பிறகு விஷாலுடன் இயக்குனர் பூபதிபாண்டியன் இணைந்திருக்கிற படம் ?பட்டத்துயானை?. இந்த படத்தில் ஆக்ஷன்கிங் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். இதே அர்ஜூனிடம்தான் முதன்முதலில் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார் விஷால். அந்த வகையில் ஐஸ்வர்யா ஏற்கனவே விஷாலுக்கு தெரிந்தவர்தான்.



இந்த படத்தை மைக்கேல் ராயப்பன் பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்திருக்கிறார். பூபதிபாண்டியனின் வழக்கமான காமெடி கலாட்டாக்கள் அடங்கிய ஜாலியான படம். படம் முடிந்து சென்சாரிலும் ?யு? சான்றிதழ் வாங்கியாகிவிட்டது. வரும் 26ம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளது.