2019-ம் ஆண்டின் பிரபஞ்ச அழகி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
2019-ம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த சோசிபினி துன்ஷி முடி சூட்டப்பட்டார்.
அமெரிக்காவின் அட்லாண்டாவில் 2019ம் ஆண்டிற்கான மிஸ் யுனிவெர்ஸ் அழகிப்போட்டி நடைபெற்றது. இதில் முதல் இடத்தை தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த சோசிபினி துன்ஷி பிடித்து முடி சூட்டப்பட்டார். இரண்டாவது இடத்தை புவர்ட்டோ ரிக்கோவின் மேடிசன் ஆண்டர்சன் பிடித்தார். மெக்சிகோவைச் சேர்ந்த சோபியா மூன்றாம் இடம் பிடித்தார். இந்தியாவைச் சேர்ந்த வர்த்திகா சிங் முதல் 20 இடங்களுக்குள் தகுதி பெற்றார்.
இறுதிப்போட்டியில் தகுதி பெற்ற மூன்று பேரிடமுமே ஒரே கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சோசிபினியின் சொன்ன பதிலே அவர்க்கு வெற்றி பெற உதவியது. இன்றைய காலக்கட்டத்தில் இளம் பெண்களுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டிய முக்கியமான விஷயம் எது..?என்பது தான் அந்த கேள்வி. அதற்கு பதிலளித்த சோசிபினி தலமைப் பண்பு தான் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பண்பு. மேலும் அவர், பெண்கள் சமுதாயத்தில் தங்களுக்கென தனி இடத்தை உருவாக்கிக் கொண்டு தங்களை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். இந்த பதிலுக்காக எல்லோருடைய பாராட்டையும் பெற்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
arul sudha
Contact at support@indiaglitz.com
Comments