திருமண கோலத்தில் குக் வித் கோமாளி ஜோயா.. ஹனிமூன் குறித்த அறிவிப்பு.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Friday,July 19 2024]

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் ஜோயா. இவர் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ஹனிமூன் குறித்த தகவலையும் வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மலையாள திரையுலகில் கடந்த 20 வருடங்களாக நடித்துக் கொண்டு இருப்பவர் நடிகை ஜோயா. இவர் தமிழில் அவர் கலையரசன் நடித்த ’ராஜா மந்திரி’ கீர்த்தி பாண்டியன் நடித்த ’கண்ணகி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பதும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் ஜோயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் இன்று முதல் ஒளிபரப்பாகும் ’நாகேந்திரன் ஹனிமூன்’ என்ற வெப் தொடர் ஒளிபரப்பாக உள்ளதாகவும், இந்த தொடரில் ரோஸி என்ற சின்ன கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த தோற்றத்தின் கெட்டப் மணக்கோலத்தில் இருப்பது போல் இருந்ததை அடுத்து அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று அதிர்ச்சியை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இதையடுத்து அவர் ஒரு வெப் தொடரில் கேரக்டருக்காக இந்த திருமணம் கெட்டப் போட்டிருப்பதை அறிந்து நிம்மதி அடைந்துள்ளனர்.

More News

ஷாலினிக்கு கொடுத்த அன்பு முத்தம்.. இதை விட விலை உயர்ந்த பரிசு வேறு என்ன உள்ளது?

அஜித் மனைவி ஷாலினிக்கு அவரது மகன் ஆத்விக் கொடுத்த முத்தம் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இதை விட ஒரு அம்மாவுக்கு விலை உயர்ந்த பரிசு வேற

என்ன ஆச்சு ஜான்வி கபூருக்கு? மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுவது

22 வருடங்களுக்கு முன்.. விஜய் - பிரியங்கா சோப்ரா மலரும் நினைவுகளை பதிவு செய்த பிரபலம்..!

நடிகை பிரியங்கா சோப்ரா தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரபல இசையமைப்பாளர் டி இமான் தன்னுடைய இசையில் அவர் முதன்முதலாக பாடிய பாடல் ஒலிப்பதிவு செய்யும்

இந்த போஸ்ட்டை எதிர்பார்க்கவே இல்லை.. பீச் பேபியாக மாறிய கீர்த்தி பாண்டியன்..

நடிகை கீர்த்தி பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி புகைப்படங்களை பதிவு செய்து பீச் பேபி என கேப்ஷன் கொடுத்துள்ள நிலையில் இந்த பதிவுக்கு ஏராளமான கமெண்ட் மற்றும் லைக் குவிந்து வருகிறது.

ஹேப்பி பர்த்டே கணவரே.. 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' நடிகைக்கு கல்யாணம் ஆயிருச்சா? ரசிகர்கள் அதிர்ச்சி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் நடித்து வரும் நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள் கணவரே' என்று பதிவு செய்துள்ளதை