close
Choose your channels

திருமண கோலத்தில் குக் வித் கோமாளி ஜோயா.. ஹனிமூன் குறித்த அறிவிப்பு.. வைரல் புகைப்படங்கள்..!

Friday, July 19, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருப்பவர்களில் ஒருவர் ஜோயா. இவர் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ஹனிமூன் குறித்த தகவலையும் வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மலையாள திரையுலகில் கடந்த 20 வருடங்களாக நடித்துக் கொண்டு இருப்பவர் நடிகை ஜோயா. இவர் தமிழில் அவர் கலையரசன் நடித்த ’ராஜா மந்திரி’ கீர்த்தி பாண்டியன் நடித்த ’கண்ணகி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் சில தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பதும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் ஜோயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் இன்று முதல் ஒளிபரப்பாகும் ’நாகேந்திரன் ஹனிமூன்’ என்ற வெப் தொடர் ஒளிபரப்பாக உள்ளதாகவும், இந்த தொடரில் ரோஸி என்ற சின்ன கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த தோற்றத்தின் கெட்டப் மணக்கோலத்தில் இருப்பது போல் இருந்ததை அடுத்து அவருக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று அதிர்ச்சியை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இதையடுத்து அவர் ஒரு வெப் தொடரில் கேரக்டருக்காக இந்த திருமணம் கெட்டப் போட்டிருப்பதை அறிந்து நிம்மதி அடைந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment