சென்னையில் 1000ஐ தாண்டிய 5வது மண்டலம்: 5 மண்டலங்களில் மட்டும் 6791 பேர்கள்!

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டிவிட்டது என்பதும் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டிவிட்டது என்றும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் பெரும்பாலும் சென்னையில் தான் உள்ளனர். இதனையடுத்து சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை தற்போது சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இதன்படி சென்னையில் 4 மண்டலங்களில் மட்டும் நேற்று வரை ஆயிரத்துக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் ஒரு மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அது தண்டனையார்பேட்டை மண்டலம். இம்மண்டலத்தில் 1044 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சென்னை ராயபுரம் மண்டலத்தில் 1981 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ராயபுரத்தை அடுத்து கோடம்பாக்கத்தில் 1460 பேர்களும், திருவிக நகரில் 1188 பேர்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1118 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஐந்து மண்டலங்களில் மட்டும் மொத்தம் 6791 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் அண்ணா நகரில் 867 பேர்களும், வளசரவாக்கத்தில் 703 பேர்களும், அடையாறில் 579 பேர்களும், அம்பத்தூரில் 446 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக ஆலந்தூர் மண்டலத்தில் 121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

நடிகை அஞ்சலியின் வொர்க்-அவுட் பார்ட்னர்: வைரலாகும் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அஞ்சலி தற்போது கோலிவுட் திரையுலகில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக விடுமுறையில் இருக்கும்

இனிமேல் போர் விமானம், வெடிகுண்டு எதுவுமே வேண்டாம்... வந்துவிட்டது அமெரிக்காவின் அதிநவீன லேசர் ஆயுதம்!!!

கொரோனா ஒரு பக்கம் உலகையே அச்சுறுத்தி வந்தாலும் வடகொரியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களது இராணுவ பலத்தை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

கியூட்டாக ஒருவர், ஹாட்டாக ஒருவர்: 'மாஸ்டர்' பாடல்களுக்கு டான்ஸ் ஆடிய நடிகைகள்

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் தீபாவளி அன்றுதான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து

தமிழகத்தின் கடைசி ஜமீன் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

தமிழகத்தில் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் பட்டத்துக்காரர் தென்னாட்டுப்புலி நல்லகுட்டி சிவசுப்பிரமணிய கோமதிசங்கர ஜெய தியாகமுத்து சண்முகசுந்தர முருகதாஸ் தீர்த்தபதி

நடிகர் சூர்யாவுக்கு காயமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஊரடங்கு உத்தரவு