1000ஐ தாண்டிய இரண்டாவது மண்டலம்: இன்றைய சென்னை கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது குறிப்பாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவீதத்துக்கும் மேல் சென்னையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 

நேற்று வரை தமிழகத்தில் 11224 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் இவர்களின் 6750 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கவை. இந்த நிலையில் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மண்டல வாரி பட்டியலை சற்று முன் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் ஏற்கனவே ராயபுரத்தை அடுத்து மேலும் ஒரு மண்டலம் ஆயிரத்தை தாண்டியுள்ளது தெரிய வந்துள்ளது. சென்னையில் ராயபுரத்தில் 1185 பேர்களும் கோடம்பாக்கத்தில் 1041 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரண்டு மண்டலங்களிலும் ஆயிரத்துக்கும் கொரோனாவால் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து திருவிக நகர் 790 பேர்களும், தேனாம்பேட்டை 746 பேர்களும் தண்டையார்பேட்டையில் 581 பேர்களும் வளசரவாக்கத்தில் 522 பேர்களும் அடையாறு பகுதியில் 367 பேர்களும் அம்பத்தூர் பகுதியில் 317 பெயர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள மண்டலங்களில் மிகக்குறைவாக ஆலந்தூரில் 80 பேர்களும், பெருங்குடி மற்றும் மணலியில் 86 பேர்களும் சோழிங்கநல்லூரில் 95 பேர்களும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

'சென்னை 600028' மூன்றாம் பாகம் உண்டா? சிஎஸ்கே நிர்வாகிக்கு வெங்கட்பிரபு பதில்

வெங்கட் பிரபு இயக்கிய முதல் திரைப்படமான 'சென்னை 600028' என்ற படம் கடந்த 2007ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி

வைரலாகும் ஆண்ட்ரியா-சித்தார்த் முத்தக்காட்சி வீடியோ

பிரபல நடிகை ஆண்ட்ரியா குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது தெரிந்ததே.

ஒரு அப்பாவாக பெருமிதம் அடைகிறேன்: மகன் செயலால் நெகிழ்ச்சி அடைந்த அருண்விஜய்

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்திற்கு பின்னர் தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய், சமீபத்தில் 'மாபியா' என்ற படத்தில் நடித்தார்.

ஊரடங்கை தளர்த்த “R” மதிப்பு குறைவாக இருக்க வேண்டும்??? உலக நாடுகள் பின்னபற்றும் அளவீடு!!!

கொரோனா பரவலைத் தடுக்க உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கை அமல் படுத்தின. சில நாடுகளில் கடுமையாகவும் சில நாடுகளில் மென்மையாகவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன

ஊரடங்கு முடிந்தபின் இதை வைத்து கொள்ளலாமே: அரசுக்கு நடிகர் விவேக் வேண்டுகோள்

தேர்வு என்பது மாணவர்களுக்கு மட்டுமின்றி அவர்களுடைய பெற்றோர்களுக்கும் மன இறுக்கமானது என்றும் எனவே பத்தாம் வகுப்பு தேர்வை ஊரடங்கு முடிந்த் பின்னர் வைத்துக் கொள்ளலாமே