எங்கள் உழைப்பை திருடாதே! ஜொமைட்டோ ஊழியர்கள் போராட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை போன்ற பெருநகரங்களில் ஆன்லைன் உணவு சப்ளை செய்யும் நிறுவனங்களை நம்பித்தான் பலர் உள்ளனர். மக்களின் சோம்பேறித்தனத்தை முதலீடாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் ஏற்கனவே நல்ல லாபத்தில் இருக்கும் நிலையில் தற்போது ஊழியர்களின் ஊதியத்திலும் கைவைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சென்னையில் உள்ள ஒருசில பகுதிகளின் ஜொமைட்டோ ஊழியர்கள் தங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை நிறுவனம் குறைத்துள்ளதாகவும், தங்களுடைய உழைப்பை நிறுவனம் திருடிக்கொள்வதாகவும் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளனர்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் அடிமைகள் தாங்கள் இல்லை என்றும், தங்களுக்கு உரிய சரியான ஊதியத்தை வழங்கவில்லை என்றால் பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஊழியர்களின் இந்த கோரிக்கைக்கு ஜொமைட்டோ நிறுவனத்தின் நிர்வாகிகள் கவனிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com