அவரு என் கழுத்துல கத்திய வச்சாரு... நான் பதறிட்டேன்... அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் “என் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார்” என்ற அதிர்ச்சி தகவலை கிரான் ஃபிளவர் தற்போது வெளியிட்டு இருக்கிறார். ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கிரான் ஃபிளவர் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது யூனிஸ்கான் இப்படி பயமுறுத்தும் செயலில் ஈடுபட்டார் என்ற அதிர்ச்சி தகவலை பல ஆண்டுகளுக்கு பின்பு இப்போது பொது வெளியில் கூறியிருக்கிறார். இத்தகவல் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கிரான் ஃபிளவர் கடந்த 2014 – 2019 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றினார். அப்போது யூனிஸ்கானை கையாள்வது மிகவும் சிரமமாக இருந்தது எனவும் அவர் கொலை மிரட்டல் விடும் செயலில் ஈடுபட்டதாகவும் தற்போது கிரான் ஃபிளவர் கூறியிருக்கிறார். “கடந்த 2016 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மணில் பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் யூனிஸ் கான் விளையாட இருந்தார். அவருக்கு பேட்டிங்கில் சில டிப்ஸ்களை கூற நான் முயன்றபோது அவர் தீடீரென கழுத்தில் கத்தியை வைத்து விட்டார். நான் பதறிவிட்டேன். அப்போது அருகில் இருந்த மிக்கி ஆர்தர் இப்பிரச்சையில் தலையிட்டு சமாளித்தார். இந்த அனுபவம் சற்று வித்தியாசமாக இருந்தாலும் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பயிற்சியாளராக பணியாற்றும்போது இது இயல்புதான் என்று நான் எடுத்துக் கொண்டேன். இருப்பினும் இந்த சம்பவம் அந்த தொடரையே எனக்கு நரகமாக மாற்றியது” என்று தெரிவித்து இருக்கிறார்.
கிரான் ஃபிளவர் தற்போது இலங்கை அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எப்போதும் பாகிஸ்தான் அணிக்கு பணியாற்றுவது என்றால் பயிற்சியாளர்கள் மத்தியில் சிறிய பயம் இருக்கத்தான் செய்கிறது. கடந்த 2007 இல் உலகக் கோப்பை நடைபெற்ற போது பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக பணியாற்றிய உல்மர் மர்மமான முறையில் இறந்து போனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கிரான் ஃபிளவரும் அதிர்ச்சியான ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments