கேரளாவில் ஜிகா வைரஸ்...! அதிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி....?
Send us your feedback to audioarticles@vaarta.com
கேரள மாநிலத்தில் ஜிகா வைரஸ் என்னும் புதிய தொற்று அதிகமாக பரவி வருகிறது.
கொரோனாவின் இரண்டாம் அலை இறுதி கட்டத்தை நெருங்கி வரும் சூழலில், மூன்றாவது அலையிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள மக்கள் தடுப்பூசிகள் போட்டும், இதர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் வருகிறார்கள். இதேபோல் நமது அண்டை மாநிலம் கேரளாவிலும் தொற்று குறையவில்லை. தினசரி பாதிப்பு என்பது 12 ஆயிரத்திற்கும் அதிகமாகவே இருந்து வருகிறது.
ஜிகா வைரஸின் அறிகுறிகள் என்ன?
இந்த நிலையில் கேரளாவில் "ஜிகா வைரஸ்" என்ற புதிய தொற்று பரவி வருகிறது. அங்கு பாறசாலை என்ற இடத்தில், 24 வயதுடைய இளம்பெண்ணுக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள 13 நபர்களின் மாதிரிகள், புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஜிகா வைரஸ் பெரும்பாலும் மழைக்காலங்களில் பரவக்கூடிய ஒரு வகையான காய்ச்சல் ஆகும். இந்த தொற்று பரவ முக்கிய காரணியாக இருப்பது கொசுக்கள் ஆகும். டெங்கு, சிக்கன்குனியா உள்ளிட்ட காய்ச்சல் நோய்களை பரப்பக்கூடிய கொசுக்கள் தான், இந்த வைரஸையும் பரப்புகிறது.
ஈரப்பதம் அதிகமாக உள்ள இடங்களில் இந்த ஜிகா தொற்றின் தாக்கமும் அதிகமாக இருக்கும். கொசுக்கள் இந்நோயை பரப்பும் என்பதால், வீட்டைசுத்தமாகவும், நம்மை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்ததொற்றிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள, வெண்ணீர் குடிப்பது நன்மையானதாக இருக்கும். தலைவலி, முதுகுவலி, உடல் சோர்வு, கண் சிவத்தல் போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாக இருக்கும்.
குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். வயிற்றில் உள்ள சிசுவிற்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளதால், கர்ப்பிணிகள் தங்களை தற்காத்துக் கொள்வது அவசியமாகும். தமிழகத்தில் பாதிப்பில்லை என்றாலும், இந்நோய் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout