நிழலின் நீளம் பூஜ்ஜியமாகும் நாள் இன்று...! அறிவியல் நிகழ்வை கண்டு ரசிக்க சிறப்பு ஏற்படு!
Send us your feedback to audioarticles@vaarta.com
வருடத்திற்கு இருமுறை, நிழலில் நீளம் பூஜ்ஜியமாகிறது. இந்த நாள் இன்று வருவதால், இந்த அறிவியல் நிகழ்வை கண்டு ரசிப்பதற்காக, பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதாவது, வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே சூரியன் நம் நேர் உச்சிக்கு வரும். ஓர் இடத்திலுள்ள பொருளின், நிழலின் நீளம் கீழேபடாது. அந்த நாளை அறிவியலாளர்கள் "நிழல் இல்லா நாள்' என்கிறார்கள்.
மேலும் இதே போன்ற நிகழ்வு, மீண்டும் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடைபெறும். மகர ரேகைக்கு 23.45 டிகிரி தெற்காகவும், கடக ரேகைக்கு 23.45 டிகிரி வடக்காகவும் உள்ள நாடுகளில் மட்டுமே இந்த நிகழ்வைக் காண முடியும். பகல் 12 மணிக்குத்தான் பொருள்களின் நிழல் பூஜ்ஜியமாகும் என கூறியுள்ளனர்.
இந்த நிகழ்வை நாம் தெரிந்துகொள்வதன் மூலம் நமது அட்சரேகையை நாமே கணக்கிட முடியும். மேலும், சூரியனின் உயரத்தையும் துல்லியமாக கணக்கிடலாம் என கூறுகிறார்கள் அறிவியலாளர்கள்.
நிழல் இல்லா நாள் குறித்த, வானியல் நிகழ்வை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இதற்காக சிறப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது. இதனை காண்பதற்கு மாணவர்களும், பொதுமக்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments