படப்பிடிப்பு தொடங்கும் முன்பே 'தளபதி 66' வியாபாரம் தொடங்கிவிட்டதா?

தளபதி விஜய் தற்போது நெல்சன் இயக்கிவரும் ‘பீஸ்ட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ என்பவர் தயாரித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருக்கிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் ‘தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தளபதி 66 திரைப்படத்தின் சேட்டிலைட் மற்றும் தொலைக்காட்சி உரிமையை ஜீடிவி நிறுவனம் வாங்குவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் மிகப்பெரிய தொகை கொடுக்க அந்நிறுவனம் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

ஏற்கனவே தில் ராஜூ தயாரித்து வரும் ஷங்கர் - ராம்சரண் தேஜா படத்தின் சாட்டிலைட் மற்றும் தொலைக்காட்சி உரிமையை ஜீடிவி நிறுவனம் மிகப்பெரிய தொகைக்கு வாங்கிவிட்டதாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது,.