சின்னத்திரையில் ஒரு புதிய முயற்சி.. திரைப்படமாகும் தொலைக்காட்சி தொடர்..!

  • IndiaGlitz, [Thursday,September 26 2024]

திரைப்படங்கள் போலவே, சின்னத்திரை தொடர்கள் நாளுக்கு நாள் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது. மதியம் முதல் இரவு வரை தொடர்ச்சியாக தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பாகி வருவதும் நமக்கு தெரிந்ததே.

அதேபோல, கடந்த சில மாதங்களாக வார இறுதி நாட்களில் ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக தொடர்கள் ஒளிபரப்பாகி, பார்வையாளர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், ஜீ5 சேனல் புதிய முயற்சியாக இரண்டரை மணி நேர திரைப்படத்தின் மாற்றாக ஒரு தொலைக்காட்சி தொடர் ஒளிபரப்பாக திட்டமிடப்பட்டுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் நெஞ்சத்தை கிள்ளாதே என்ற தொடர், இரண்டரை மணிநேர தொடராக வெளிவர இருக்கிறது.

காதல், பாசம், மிரட்டல் வில்லன் போன்ற அனைத்து விதமான உணர்வுகளையும் இந்த இரண்டரை மணி நேரத்தில் வெளிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு திரைப்படத்தை ரசிப்பது போலவே, இந்த இரண்டரை மணி நேர தொடரையும் ரசிகர்கள் ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது சின்னத்திரையில் ஒரு புதிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.

More News

புரட்டாசி மாத ராசி பலன்கள் ஜோதிடர் குருஜி டாக்டர் வெணுஸ் பாலாஜி

பிரபல ஜோதிடர் குருஜி டாக்டர் வெணுஸ் பாலாஜி அவர்கள், லட்சுமி நரசிம்மர் வழிபாட்டின் சிறப்பு மற்றும் புரட்டாசி மாதத்தில் அவரை வழிபடுவதன் முக்கியத்துவம் பற்றி விரிவாகப் பேசியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார் குடும்பத்தில் இருந்து இன்னொருவரா?

பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் ஆறாம் தேதி முதல் விஜய் டிவியில் தொடங்க இருக்கின்ற நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து அவ்வப்போது கசிந்த தகவல்களை ஏற்கனவே பார்த்தோம்.

'கொட்டுக்காளி' உள்பட இந்த வாரம் ஓடிடியில் எத்தனை தமிழ்ப்படங்கள்? முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் சூரி நடித்த 'கொட்டுக்காளி'  உள்பட நான்கு படங்கள் வெளியாகியுள்ளது

ஜீவா நடித்த திகில் பேய்ப்படம்.. 'பிளாக்' டிரைலர் ரிலீஸ்..!

நடிகர் ஜீவா மற்றும் நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவான திகில் பேய் படம் 'பிளாக்' விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஒரே விழாவில் கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா - சமந்தா.. வைரல் புகைப்படங்கள்..!

லண்டனில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பிரியங்கா சோப்ரா மற்றும் சமந்தா கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.