ஜீ தமிழ் 'கனா' சீரியல் நடிகைக்கு இன்று திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ’கனா’ என்ற சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்த தர்ஷனா அசோகன் இன்று திருமணம் செய்து கொண்டதை அடுத்து இந்த திருமணத்திற்கு ஏராளமானோர் வருகை தந்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ’கனா’ என்பதும் இந்த தொடரில் இருந்து தர்ஷனா அசோகன் சமீபத்தில் விலகினார் என்பது தெரிந்தது. திருமணம் செய்து கொள்வதற்காக தான் அவர் இந்த தொடரில் இருந்து விலகியதாக கூறப்பட்ட நிலையில் இன்று அவருக்கும், அபிஷேக் என்பவர்களுக்கும் திருமணம் நடந்துள்ளது,. இந்த திருமணத்தில் இரு தரப்பின் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சின்னத்திரை உலகினர் பலர் கலந்து கொண்டனர்.
தர்ஷனா ஏற்கனவே ஒரு பல் மருத்துவர் என்ற நிலையில் அவருடைய காதல் கணவர் அபிஷேக்கும் பல் மருத்துவர் தான் என்றும் கூறப்படுகிறது. இருவரும் சில ஆண்டுகளுக்கு காதலித்ததாகவும், இவர்களது காதலுக்கு இரு வீட்டார் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்கு பிறகு தர்ஷனா சின்னத்திரையில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் சில ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com