பிரியங்காவும் இல்லை, ஸ்ரீநிதியும் இல்லை.. 'நள தமயந்தி' தொடருக்கு மூடுவிழா..!

  • IndiaGlitz, [Saturday,May 11 2024]

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘நள தமயந்தி’என்ற தொடரில் பிரியங்கா நல்காரி நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக ஸ்ரீநிதி நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை பிரியங்கா நல்காரி மறுத்திருந்தார் என்றும் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக காத்திருக்கிறேன் என்றும் தயவு செய்து யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் பிரியங்கா நல்காரி கேரக்டரின் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு வந்ததாகவும் கதை வேறு திசையில் சென்றதால் பிரியங்கா நல்காரி அந்த தொடரில் இருந்து விலகப் போவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக ‘நள தமயந்தி’தொடரின் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கி முடித்து விட்டதாகவும் கிளைமாக்ஸ் காட்சியில் பிரியங்கா கேரக்டர் இறந்தது போல் காட்டி இருப்பதாகவும் சிறப்பு தோற்றத்தில் ஸ்ரீநிதி நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த கிளைமாக்ஸ் காட்சியின் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து ‘நள தமயந்தி’தொடரில் பிரியங்காவும் நடிக்கவில்லை, ஸ்ரீநிதியும் நடிக்கவில்லை, அந்த தொடரையே முடிக்க ஜீ தமிழ் சேனல் நிர்வாகம் முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘நள தமயந்தி’தொடரில் பிரியங்கா ஹோட்டல் ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும் கேரக்டரில் நடித்த நிலையில் தற்போது நிஜ வாழ்க்கையிலும் ஒரு ஹோட்டலை தொடங்கி உள்ளார். அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் அவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

நாடி ஜோதிடம் என்றால் என்ன, அதன் வகைகள் என்ன, எப்படி செயல்படுகிறது?

ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு பிரபல நாடி ஜோதிடர் BR சிவபாலன் அவர்கள் அளித்த பேட்டியில், நாடி ஜோதிடத்தின் அற்புதங்களை பற்றி விரிவாக விளக்குகிறார்.

நம்ம குடும்பத்துக்கு அரசியல் ஒத்து வராதுடா.. 'உறியடி' விஜயகுமாரின் 'எலக்சன்' டிரைலர்..!

'உறியடி' விஜயகுமார் நடிப்பில் உருவாகிய 'எலக்சன்' என்ற திரைப்படம் மே 17ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் அரசியல் கட்சியின் முக்கிய அறிவிப்பு.. ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தலாம்..!

தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை   தொடங்கிய நிலையில் இந்த கட்சியின் முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் இந்த அறிவிப்பு குறித்து

எம்.ஆர்.ராதாவை சினிமாவில் நடிக்கக்கூடாது என கட்டளை இட்ட என்.எஸ்.கே - ராதாரவி

நடிகர் ராதாரவி அவர்கள் INDIAGLITZ-க்கு அளித்த பேட்டியில், எனது தந்தை எம். ஆர். ராதா மற்றும் கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் நாடகத்திலிருந்து வந்தவர்கள்.

'சூர்யா 44' படத்தில் இணையும் 'தக்லைஃப்' பிரபலம்..! பான் - இந்திய படமா?

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு அனேகமாக அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும்