close
Choose your channels

ZEE5 வழங்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் 'கூச முனிசாமி வீரப்பன்' பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Tuesday, December 12, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'கூச முனிசாமி வீரப்பன்' இந்தியாவின் மிகப் பிரபல வனக் கொள்ளைக்காரன் வீரப்பனின் வாழ்க்கையையும் அவனது வரலாற்றையும் நெருக்கமாக விவரிக்கும் ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸ் ஆகும். தீரன் புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபாவதி இந்த டாக்குமெண்ட்ரி சீரிஸைத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 14 ஆம் தேதி பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்பட உள்ளது

இந்நிலையில் இந்த சீரிஸ் பத்திரிக்கையாளர்களுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. திரையிடலுக்குப் பின்னர் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில் ZEE5 சார்பில் ஷ்யாம் திருமலை பேசியதாவது, ‘6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு சிறப்பான சீரிஸுடன் வந்துள்ளது ZEE5. நிறைய பேர் பாஸிடிவ் ரிவ்யூ தந்திருக்கிறீர்கள். பிரபா மூலம் தான் இந்த சீரிஸ் நடந்தது. அவருக்கும் அவரை அறிமுகப்படுத்திய எஸ் ஆர் பிரபு சாருக்கும் நன்றி. முக்கியமாக மூன்று பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். இவர்கள் மூவர் தான் இந்த சீரிஸுன் கிரியேட்டிவ் டீம். ஜெய்சந்திர ஹாஸ்மி, இவர் தான் இந்த சீரிஸுக்காக முதன் முதலில் பேசினார். இந்த சீரிஸை எழுதியிருக்கிறார். சமீபத்திய லேபிள் சீரிஸிலும் இவர் எழுதியிருக்கிறார். வசந்த் ரிசர்ச் ஹெட் எல்லா ரிசர்ச்சும் இவர் தான் செய்தார். மூன்றாவதாக சரத், இவர்கள் மூவரும் தான் இந்த சீரிஸ் உருவாகக் காரணம். மேலும் இதில் உழைத்த எல்லோருக்கும் நன்றி.

ZEE5 சார்பில் கௌஷிக் நரசிம்மன் பேசியதாவது, ‘ZEE5 க்கு இது ரொம்ப சேலஞ்சிங்கான புராஜக்ட். ரொம்ப பெருமையான புராஜக்ட். இதற்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. இதன் ஆரம்பம் கோபால் சாரும் அவரது டீமும் தான். அவர்கள் உழைப்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்த விஷுவலை முதன் முறையாக பார்க்கும் யாருக்கும் கூஸ்பம்ஸ் வரும். உங்களுக்கும் வந்திருக்கும். இந்த சீரிஸின் தூண்கள் சரத், ஜெய், வசந்த். அவர்களின் ரிசர்ச்சும் அதைத் தரைக்குக் கொண்டு வந்த விதமும் பிரமிப்பானது. பிரபா மேடத்துக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் ராஜ் இசையமைப்பாளர் சதீஷ் அசத்திவிட்டார்கள். ZEE5க்கு மிகவும் பெருமையான படைப்பாக இருக்கும். இனி இது உங்கள் கைகளில் நன்றி.

ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் பேசியதாவது, ‘ZEE5 உடன் இரண்டாவது புராஜக்ட். முதலில் ஷாம் பிரசாந்த்திற்கு நன்றி. ஜெய், வசந்த், சரத் மூவருக்கும் நன்றி. என்னை நம்பி இந்த புராஜக்டை தந்ததற்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் இந்த சீரிஸ் பிடிக்கும் நன்றி.

இசையமைப்பாளர் சதீஷ் ரகுநாதன் பேசியதாவது, ‘ZEE5 உடன் மூன்றாவது புராஜக்ட். இந்த புராஜக்டில் என்னைக் கொண்டு வந்த ஷாமுக்கு நன்றி. எனக்கு முழு சுதந்திரம் தந்து என் இசையைச் சரியாக பயன்படுத்திக் கொண்ட ஜெய், வசந்த், சரத் மூவருக்கும் நன்றி. நீங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி.

எடிட்டர் ராம் பாண்டியன் பேசியதாவது, ‘ZEE5 க்கு நன்றி. ஜெய், வசந்த், சரத் மூவருக்கும் நன்றி. ஒன்றரை வருடம் வேலை பார்த்துள்ளோம். நீங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன் நன்றி.

பிரசாந்த் பாலகிருஷ்ணன் பேசியதாவது, ‘வீரப்பன் பேரை இப்போது தேடினாலும் 500 க்கும் மேலான வீடியோக்கள் வரும். நிறைய டாக்குமெண்ட்ரி வந்திருக்கிறது அதைத் தாண்டி இந்த சீரிஸ் ஏன் என்றால் அதில் அத்தனை கதைகள் இருக்கிறது. வீரம், நகைச்சுவை, ஏமாற்றம், வலி என எல்லாமே இருக்கிறது. சொல்லாத பக்கம் நிறைய இருக்கிறது. அதில் முக்கியமானது நக்கீரன் 1996 எடுத்த வீடியோக்கள். ஜர்னலிஸ்டிக் டிரசர் என்று தான் சொல்ல வேண்டும். பிரபா இந்த ஐடியா சொன்ன போதே நன்றாக இருந்தது. எங்கள் கோபால் சார் இது எப்படி வர வேண்டும் என்று சொன்னார். வீரப்பனை ஒரு ஹீரோவாகவும் முழுமையாக இருப்பார், வில்லனாகவும் இருப்பார். இதை முழுமையாகச் சொல்ல வேண்டும் என்று தான் இந்த சீரிஸ். சரித்திரத்தில் தோற்ற அரசர்கள் கதை இருக்கும், ஜெயித்த அரசர்கள் கதைகள் இருக்கும், ஆனால் மடிந்து போன மக்களின் கதை இருக்காது. அந்த வகையில் நக்கீரன் மக்களின் கதையைத் தொடர்ந்து சொல்லி வருகிறது. அதில் முக்கியமான சீரிஸாக ‘கூச முனிசாமி வீரப்பன்’ இருக்கும். ஜெய், சரத், வசந்த் மற்றும் உடன் உழைத்த அனைவருக்கும் நன்றி. இது விவாதங்களை உருவாக்கும் ஒரு பெருமையான படைப்பாக இருக்கும் நன்றி.

நக்கீரன் நிருபர் சுப்பு பேசியதாவது..1993ல என்னுடன் வீரப்பனை சந்திக்க இருவர் வந்தனர். அப்போது புகைப்படங்கள் மட்டுமே எடுத்தோம். அது நக்கீரனில் வந்தது. இது எல்லோருக்கும் தெரியும். பின்னர் 1996 ல் வீடியோ பதிவு செய்து ஒளிபரப்பினோம். நாங்கள் சேகரித்த பல தகவல்கள் உங்களுக்கு இந்த டாக்குமெண்ட்ரி மூலமாகக் கொண்டு வந்து தந்திருக்கிறோம். இதைச் சாத்தியமாக்கிய எங்கள் கோபால் ஆசிரியருக்கு நன்றி.

இயக்குநர் சரத் ஜோதி பேசியதாவது, ‘எல்லா இயக்குநருக்கும் முதல் புராஜக்ட் ரொம்ப முக்கியமானது. ஷங்கர் சார் கிட்ட இருந்து வெளியே வந்து ஒரு சீரிஸுக்காக உழைத்தோம். கோவிடால அது தடங்கல் ஆயிடுச்சு. அந்த நேரத்தில தான் இந்த வாய்ப்பு வந்ததது. இந்த புராஜக்ட் கேக்க அவ்வளவு பிரமிப்பாக இருந்தது. முதல்ல வீரப்பன எனக்கு அடையாளப்படுத்தியது நக்கீரன் புத்தகம் தான். இப்ப இந்த புராஜக்ட் பண்ணும்போது அந்த புத்தகங்கள் படிச்சேன். அதில் பிரமிப்பை ஏற்படுத்தியது முதல் முதல்ல வீரப்பன தேடிபோன பத்திரிக்கையாளர்களோடு அனுபவம் தான். அது மிகப் பிரம்மாண்ட து. தன்னோடு வீரப்பன் பேட்டிகள எடுத்த எல்லா பத்திரிக்கையாளர்களையும் கோபால் சார் தன் புத்தகங்களில் அடையாளப்படுத்திருக்காரு. இந்தக்கதையை எந்தக்காரணத்துக்காகவும் இத சினிமாத்தனமா ஆக்கிடக்கூடாதுங்கிறதுல தெளிவா இருந்தோம். எல்லாத்துக்கும் உண்மையான வீடியோ பதிவுகள் சாட்சியங்கள் இருக்கு. அதை அப்படியே வீரப்பனோட பக்கத்துல இருந்து உங்களுக்கு சொல்லனும்னு முயற்சி பண்ணினோம். மூணு டிராஃப்ட் எழுதி அதில் ஃபைனலா வந்தது தான் திரையில் பார்க்குறீங்க. சிலர் வீரப்பன ஹீரோவா காட்டுற கதையானு கேக்குறாங்க, இல்ல எந்த வகையிலும் அப்படி ஆகிடக்கூடாதுன்றது தான் எங்கள் நோக்கம். இப்ப வடநாட்டில் அடக்குமுறை நடக்குது, அத பதிவும் பண்றாங்க. இனி வர்ற காலத்தில் அதுவும் டாக்குமெண்ட்ரியா வரலாம். தமிழில் இது முதல் முறையா இருக்கும். பல சொல்லப்படாத கதைகள் இன்னும் இருக்கு. இன்னும் எக்கச்சக்க வீடியோக்கள், பேட்டிகள், பலரோட துயரங்கள் இருக்கு. எல்லாத்தையும் நாங்க ஆய்வு செஞ்சு, அத 6 எபிசோடா கொண்டு வந்திருக்கோம். இந்த மாதிரி ஒரு டாக்குமெண்ட்ரி தமிழுக்கு ரொம்ப புதுசு. ஆனால் எங்க மேல நம்பிக்கை வச்சு, இந்தக்கதை மக்களுக்கு போய்ச்சேரனும்னு முடிவு பண்ணி ஆதரவு தந்த ZEE5 க்கு நன்றி. காட்டுக்குள்ள நாங்க போய் ஷீட் பண்ணினது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு, ஆனால் அங்க கேமராவ தன்னோட தோள்ல தூக்கிட்டே சுத்துன என்னோட கேமராமேன் ராஜுக்கு நன்றி. ரொம்ப குருஷுயலனா டைம்ல நிறைய பேர் பார்த்து கடைசியா வந்தவர் தான் மியூசிக் டைரக்டர் சதீஷ். இந்த ஃபார்மேட்ட புரிஞ்சுகிட்டு அதுக்கேத்த மாதிரி வெறும் 5 நாள்ல மியூசிக் பண்ணி தந்தாரு. அவருக்கு நன்றி. எடிட்டர் ரொம்ப சிறப்பான எடிட்டிங் தந்தார். இந்த புராஜக்ட் நல்லா வரக் காரணம் என்னோட எழுத்தாளர்கள் டீம். நிறைய சண்டை போட்டிருக்கோம். பிரபா, ஜெயசந்திர ஹாஷ்மி, வசந்த் மூவருக்கும் என் நன்றி. என்னோட குழு ரொம்ப ரொம்ப கடுமையா உழைச்சிருக்காங்க, அவங்க எல்லோருக்கும் என்னோட நன்றி. இந்த புராஜக்ட் பின்னாடி கோபால் சாரோட 30 வருட உழைப்பு இருக்கு. அவர் இதுக்காக கொடுத்த விலை அதிகம். இந்த ஃபுட்டேஜ் எல்லாம் அவர் இவ்வளவு வருடம் பாதுகாத்து வச்சிருந்தது ரொம்ப பெரிய விஷயம். அவர் எங்களை நம்பியதற்கு மிகப்பெரிய நன்றி. எல்லோருக்கும் நன்றி.

எழுத்தாளர் ஜெயச்சந்திர ஹாஷ்மி, ‘எல்லாம் ஆரம்பித்தது நக்கீரனிலிருந்து தான். முதல் நன்றி கோபால் சாருக்கு தான். தன் உயிரை கொடுத்து 30 வருட உழைப்பில் உருவாக்கின, பாதுகாத்து வச்ச புட்டேஜை எங்களை நம்பி தந்தார். அது எங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பை தந்தது. அவருக்கு நன்றி. அவர் எங்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தான் எங்களிடம் இருந்தது. இப்போது இந்த சீரிஸ் பார்க்கும் போது அவர்களுக்கு மகிழ்ச்சி என்பதே எங்களுக்கு வெற்றி தான். அடுத்ததாக பிரபா எங்களுடன் இணைந்து கனவை நனவாக்கியதில் இதை இங்கு வரை கொண்டு சேர்த்ததில் அவரது உழைப்பு மிகப்பெரிது. பல வேலைகளுக்கிடையில் இதில் உழைத்தது மிகப்பெரிய பிரமிப்பு தான். வசந்த் இந்த சீரிஸில் எங்கு திரும்பினாலும் இருப்பார். இந்த புராஜக்டில் ரிசர்ச் மிக மிக முக்கியம். நாங்கள் எழுதியதை உண்மையாகத் தேடி எங்கள் முன் அதை கொண்டு வந்தவர் அவர் தான், அதற்காக அவருக்கு முக்கிய நன்றி. சரத்தின் உழைப்பு மிக முக்கியமானது. நாங்கள் இணைந்து உருவாக்கிய கனவைத் திரையில் கொண்டு வந்தவர் அவர் தான். எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் உழைத்தார். நாங்கள் ஆரம்பித்த போது நினைத்ததை இந்த சீரிஸில் கொண்டு வந்துவிட்டோம். இந்த மாதிரி ஒரு சீரிஸை எங்களை நம்பி ஆதரவு தந்த ஷாம், கௌஷிக், ZEE5க்கு மிகப்பெரிய நன்றி. என் படக்குழுவிற்கு நன்றி. நக்கீரன் வீரப்பனை அடையாளம் காட்டியது, அவன் செய்த தவறுகளையும் மக்களுக்கு நடந்த அநியாயங்களையும் கொண்டு வந்தது நக்கீரன் தான். அதைத்தான் இதில் கொண்டு வந்துள்ளோம். நல்ல கலை நடுக்கத்தை தர வேண்டும் என்பார்கள். அப்படி ஒரு பெருமையான படைப்பில் பணியாற்றியது மகிழ்ச்சி.

தயாரிப்பாளர் பிரபாவதி பேசியதாவது, ‘இது எனக்கு மிக முக்கியமான மேடை. என்னை இந்த இடத்திற்குக் கொண்டு வந்தது என் தந்தை தான். என் சிறு வயதில் அப்பா கிளம்பும்போது வீடே அழும், ஏன் எனக் கேட்பேன். அப்பா வீரப்பனைப் பார்க்கப் போகிறார், அவர் யானையைக் கொன்றவர் மனிதர்களைக் கொன்றவர் என்றார்கள். அவரை ஏன் அப்பா பார்க்கப் போக வேண்டும் என நினைப்பேன். ஆனால் ஒரு நாள் காட்டில் இருந்து வந்து மயிலிறகு தந்து, வீரப்பன் தந்தாக சொன்னார். வீரப்பன் எப்படி இவ்வளவு எளிமையான மனிதராக இருக்க முடியும் எனத் தோன்றியது. கல்லூரி காலத்தில் தான் அவரைப் பற்றி முழுதாக தெரிய ஆரம்பித்தது. என்றாவது ஒரு நாள் அவரது கதையை படமாக்க வேண்டும் என நினைத்தேன். அப்பாவிடம் கேட்ட போது எனக்கு தான் நிறைய டெஸ்ட் வைத்தார். இதை செய்தால் முறையாகச் சரியாகச் செய்ய வேண்டும் என்றார். அப்படித்தான் இந்தப் பயணம் ஆரம்பித்தது. இதைத் தயாரிக்கப் போகிறோம் என்றவுடன் எஸ் ஆர் பிரபு சாரிடம் போனேன் அவர் மிக ஆதரவாக எல்லாம் சொல்லித்தந்தார். எங்களுக்குக் கனவிருக்கலாம் ஆனால் அதைச் சரியாகப் புரிந்து கொண்டு ஷாம், கௌஷிக், ZEE5 யிலிருந்து பெரிய ஆதரவைத் தந்தார்கள். ஜெய், வசந்த் இருவரும் தான் என் கனவிற்குத் துணையாக இருந்தார்கள். எங்களுடன் எந்த ஈகோவும் இல்லாமல் வந்து எங்களுடன் உழைத்து உருவாக்கிய சரத்துக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் ராஜ் காட்டுக்குள் அவரது உழைப்பு பெரியது. இசையமைப்பாளர் சதீஷ் மிகச்சிறப்பாக பணியாற்றியுள்ளார். இதில் நிறையப்பேர் உயிரைத்தந்து உழைத்துள்ளனர். சீமான், என் ராம் சார் என எங்கள் மீது அக்கறை கொண்டு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. வீரப்பனுடன் இருந்த சித்தன் அவர்களை நக்கீரன் சரணடைய வைத்தது. இப்போது அவரின் எளிமையான வாழ்வை தீரன் புரடக்சன்ஸுக்காக படம்பிடித்தது பெருமை. நல்ல படைப்பிற்கு ஆதரவு தரும் நீங்கள் எங்கள் படைப்பிற்கும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நக்கீரன் கோபால் பேசியதாவது, ‘ஷாம், கௌஷிக் ZEE5 க்கு நன்றி ஏனென்றால் முதலில் நக்கீரன் என்றால் தைரியம் வேண்டும், அப்புறம் வீரப்பன் என்றால் இன்னும் தைரியம் வேண்டும். ஆனால் அதைச் சாத்தியமாக்கி இருக்கிறார்கள். வீரப்பனின் கதையை எடுப்பதற்காக நிறைய பேர் வந்தார்கள். என் மகள் கேட்பதற்கு முன்பாகவே நிறைய பேர் கேட்டார்கள். ஆனால் இதைச் சரியாகச் செய்ய வேண்டுமே என்கிற தயக்கம் இருந்தது. பாலுமகேந்திரா கூட கேட்டார் ஆனால் மறுத்துவிட்டேன். இதற்காக நாங்கள் எங்கள் டீம் இழந்தது அதிகம். இது வரை வந்தது அனைத்துமே போலீஸ் பார்வையில் வீரப்பனின் கதை. அதைப் பார்க்கும் போதே கோபமாக வரும். பாதிக்கப்பட்டவன் அவ்வளவு பேர் இருக்கிறார்களே, அதைப்பதிவு செய்ய வேண்டுமே, அவர்களுக்குத் தீர்வு வேண்டுமே என்று தோன்றும். பாதிக்கப்பட்டவர்களுக்காக எவ்வளவோ போராடினோம். இதில் வந்திருப்பது வெறும் .001 பகுதி மட்டுமே. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை நிவாரணம் இல்லை. அந்த பாதிப்பை வலியை இவர்கள் சரியாகப் பதிவு செய்து விட்டார்கள். என் மகளுடைய டீம் அதைச் செய்துள்ளார்கள் என்பது பெருமையாக இருக்கிறது. இதைத் தைரியமாக செய்த ZEE5 க்கு நன்றி. இது நக்கீரனின் 30 வருட உழைப்பு, எனக்கு வீரப்பனைப் பிடிக்கும் வீரப்பனுக்கு என்னைப் பிடிக்கும் ஆனால் எந்த இடத்திலும் நக்கீரன் வீரப்பனுக்கு ஆதரவாக ரிப்போர்ட் செய்ததில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் தான் நாங்கள் நின்றோம். வீரப்பனைத் தேடிப்போய்ப் பார்த்துப் பல கஷ்டங்களுக்கு பிறகு 1996 ல் அவரை வீடியோவில் கொண்டு வந்தோம். அதை அத்தனையையும் இவர்களிடம் தந்து இதைச் சரியாகக் கொண்டு வந்து விடுங்கள் என்று மட்டும் சொன்னேன். அதை மிகச் சரியாகச் செய்து விட்டார்கள். இதில் உழைத்த கலைஞர்கள் அனைவரும் அவ்வளவு அர்ப்பணிப்போடு உழைத்துள்ளார்கள். பல வருடங்களுக்குப் பிறகு நேரில் போய்ப் பல ரிசர்ச் செய்து, அந்த தகவல்களைக் கொண்டு வந்து சேர்த்துள்ளார்கள். திரையில் அந்தக்கதையை உண்மையாகக் கொண்டு வந்துள்ளார்கள். இதற்காக உழைத்த என் டீம் பலர் ஜெயிலுக்கு போயிருக்கிறார்கள் நான் 9 மாதம் ஜெயிலுக்குப் போனேன். நக்கீரனின் இந்த உழைப்பைக் காப்பாற்றிக் கொண்டு வந்த இந்த குழுவிற்கும் ZEE5 க்கும் நன்றி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment