ZEE5 இன் மலையாள ஆந்தாலஜி தொகுப்பு 'மனோரதங்கள்' வெளியீட்டு விழா.. மோகன்லால் பங்கேற்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ZEE5 இன் 'மனோரதங்கள்,' மலையாள சினிமாவின் சிறந்த திறமைகளை முன்னிலைப்படுத்தும் ஒன்பது வசீகரிக்கும் கதைகளுடன் M.T வாசுதேவன் நாயரின் கற்பனை உலகத்துக்கான பயணமாக அமைந்துள்ளது.
மனோரதங்கள்', இப்போது மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ZEE5 இல் கிடைக்கிறது, இது ஒன்பது சூப்பர் ஸ்டார்கள் மற்றும் எட்டு மதிப்பிற்குரிய திரைப்பட இயக்குநர்களை உள்ளடக்கிய இந்தியாவின் மிகச்சிறப்பான படைப்பாகும்.
இந்தியாவின் மிகப் பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5 , மலையாளத் திரையுலகில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும், வரலாற்றுப் படைப்பான ‘மனோரதங்கள்’ தொகுப்பைப் பிரம்மாண்ட விழாவில் வெளியிட்டது. ‘மனோரதங்கள்’ திரைப்படம் இலக்கிய உலகின் பிதாமகனான, எம்.டி என்று அன்புடன் அழைக்கப்படும், வாசுதேவன் நாயரின் 90 ஆண்டுக்கால பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வசீகரிக்கும் இந்த தொகுப்பின் ஒரு கதையில் தோன்றியுள்ள நட்சத்திர நடிகர் மோகன்லால் மற்றும் எம்.டி.யின் மகள் அஸ்வதி V நாயர் ஆகியோர் முன்னிலையில் பிரமாண்டமான வெளியீட்டு நிகழ்வு, கோலாகலமாக நடைபெற்றது. மனோரதங்கள் படத்தின் ஒரு அத்தியாயத்தை இயக்கியுள்ள வாசுதேவன் நாயர் மகள், அஸ்வதி V நாயர் எம்.டி.யின் கடிதத்தைப் படித்து காட்டினார், அதில், வாசுதேவன் நாயர், தன்னுடன் மனோரதங்களில் பணியாற்றிய அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்திருந்தார்.
கடவுளின் சொந்த நாடான கேரளாவின் பசுமையான பின்னணியில், மனித இயல்பின் சிக்கலான இருமையை ஆராயும், ஒரு அற்புதமான சினிமா பயணமாகும். மதிப்பிற்குரிய எம்.டி அவர்களால் எழுதப்பட்ட கதைகளை ஒருங்கிணைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவின் உட்ச நட்சத்திரங்கள் மற்றும் திறமைமிகு இயக்குநர்கள் இந்த படைப்பில் இணைந்து பணியாற்றியுள்ளனர். இது மனித நடத்தையின் முரண்பாடுகளை ஆராய்கிறது, ஆழ்ந்த இரக்கம் மற்றும் அடிப்படை உள்ளுணர்வு ஆகிய இரண்டிற்கும் இடையிலான பதற்றத்தை ஆராய்வதன் மூலம், இந்தத் தொடர் மனிதகுலத்தின் செழுமையான, நுணுக்கமான சித்தரிப்பை வழங்குகிறது, அது உலகளாவிய அனுபவங்கள் மற்றும் உணர்ச்சிகளுடன் எதிரொலிக்கிறது. முதன்முறையாக, ZEE5 இல் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் குழு ஒன்று சேர்ந்துள்ளது.
பத்ம விபூஷன், டாக்டர் கமல்ஹாசன் ஒன்பது அழுத்தமான கதைகளை உள்ளடக்கிய இந்த தொகுப்பை அறிமுகப்படுதுகிறார். : 'ஒல்லவும் தீரவும்' (சிற்றலைகள் மற்றும் நதிக்கரை), கதையில் புகழ்பெற்ற மோகன்லால் நடிக்க, இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார். 'கடுகண்ணவ ஒரு யாத்திரை குறிப்பு' (கடுகண்ணவ: ஒரு பயணக் குறிப்பு) இயக்குநர் ரஞ்சித்தின் இயக்கத்தில் நட்சத்திர நடிகர் மம்முட்டி நடித்துள்ளார். 'ஷிலாலிகிதம்' (கல்வெட்டுகள்) கதையில் பிஜு மேனன், சாந்தி கிருஷ்ணா மற்றும் ஜாய் மேத்யூ ஆகியோர் நடிக்க, பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.
'காட்சி' (பார்வை) கதையில் பார்வதி திருவோது மற்றும் ஹரிஷ் உத்தமன் நடிக்க, தொலைநோக்குப் படைப்பாளி ஷியாம பிரசாத் இயக்கியுள்ளார். 'வில்பனா' (தி சேல்) கதையில் அஸ்வதி நாயர் இயக்கத்தில் மது மற்றும் ஆசிப் அலி நடித்துள்ளனர். மகேஷ் நாராயணன் இயக்கிய 'ஷெர்லாக்' கதையில் பன்முக திறமையாளர் ஃபஹத் பாசில் மற்றும் ஜரீனா மொய்து ஆகியோர் நடித்துள்ளனர்.
'ஸ்வர்கம் துறக்குன்ற நேரம்' (சொர்க்கத்தின் கதவுகள் திறக்கும் போது) கதையில் ஜெயராஜன் நாயரின் இயக்கத்தில் கைலாஷ், இந்திரன்ஸ், நெடுமுடி வேணு, என்ஜி பணிக்கர் மற்றும் சுரபி லட்சுமி உள்ளிட்ட குழுவினர் நடித்துள்ளனர். 'அப்யம் தீடி வேண்டும்' (மீண்டும் ஒருமுறை புகலிடம் தேடி) கதையில் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் சித்திக், இஷித் யாமினி மற்றும் நசீர் நடித்துள்ளனர். 'காதல்க்காட்டு' (கடல் தென்றல்) கதையினை இந்திரஜித் மற்றும் அபர்ணா பாலமுரளி நடிப்பில், ரதீஷ் அம்பாட் இயக்கியுள்ளார்.
இந்நிகழ்வினில் மோகன்லால் கூறுகையில் , “எம்டி சார் எழுதிய இந்தக் கதைக்காக என்னை அணுகியபோது, அவருக்கு குரு தட்சிணையாக இதைச் செய்ய ஆசைப்பட்டேன். மனோரதங்கள் ஆகஸ்ட் 15 அன்று ZEE5 இல் திரையிடப்படுகிறது. இந்த தனித்துவமான திட்டமானது ஓடிடி ஊடகத்திற்காக வடிவமைக்கப்பட்ட ஒன்பது திரைக்கதைகளைக் கொண்டுள்ளது, அவை இப்போது இந்திய சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களால் திரைப்படங்களாக மாற்றப்பட்டுள்ளன. பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட இந்த காலமற்ற கதைகளை, இந்த முயற்சியின் மூலம் உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க பங்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout