திடீரென இலவசத்திற்கு மாறிய 'ஆர்.ஆர்.ஆர்'. ராக்கிபாய் இதை பின்பற்றுவாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் ஓடிடியில் Pay Per View என்ற முறையில் ஒரு முறை கட்டணம் கட்டி பார்க்கும் வகையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இலவசமாக பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் வெளியாகி ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்த நிலையில் இந்த படம் ஜூன் 20ஆம் தேதி அதாவது நாளை ஜீ5 ஓடிடியில் வெளியாக இருப்பதை அடுத்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது .
‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை Pay Per View முறையில் ஒருமுறை பணம் கட்டி பார்க்கவேண்டும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜீ5 சந்தாதாரராக இருந்தாலே போதும் இலவசமாக பார்த்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜீ5 நிறுவனத்தின் இந்த திடீர் மாற்றம் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அறிவித்துள்ளது.
இதேபோல் கட்டணம் செலுத்தி பார்க்க வேண்டுமென்று ’கேஜிஎஃப் 2 படத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் போல் ’கேஜிஎஃப் 2 படத்திற்கும் இலவசமாக கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com