பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளிய பிசினஸ்மேன் யார் தெரியுமா?
- IndiaGlitz, [Wednesday,August 30 2017]
உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை கடந்த பல வருடங்களாக தக்க வைத்திருக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸை ஸ்பெயின் நாட்டின் தொழிலதிபர் ஒருவர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜாரா என்ற ஜவுளி உற்பத்தி மற்றும் ரீடெயில் நிறுவனத்தின் நிறுவனர் அமான்சியோ ஓர்டேகா (Amancio Ortega) என்பவர் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.
இதுவரை ஐரோப்பிய நாடுகளின் நம்பர் ஒன் பணக்காரராகவும், உலகின் இரண்டாவது பணக்காரராகவும் இருந்த இவரது சொத்து மதிப்பு தற்போது $85 பில்லியன் ஆக உள்ளது. இது பில்கேட்ஸின் சொத்து மதிப்பை விட மிகச்சிறிய அளவில் மட்டுமே அதிகம் என்பதால் மீண்டும் பில்கேட்ஸ் முதலிடத்தில் வெகுவிரைவில் வர வாய்ப்புள்ளது.
கடந்த மாதம் அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ் என்பவர் சில நாட்கள் மட்டும் பில்கேட்ஸை முந்தி நம்பர் ஒன் பணக்காரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.