மைக்ரோசாப்ட் சி.இ.ஓ சத்ய நாதெள்ளாவில் 26 வயது மகன் காலமானார்:

  • IndiaGlitz, [Tuesday,March 01 2022]

உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் சிஇஓவாக பணிபுரிந்து வரும் இந்தியாவைச் சேர்ந்த சத்யா நாதெல்லா வின் மகன் ஜெயின் நாதெல்லா என்பவர் திடீரென காலமாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லவின் 26 வயது மகன் ஜெயின் நாதெல்லா பிறவியிலேயே பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த சில வருடங்களாக தனது நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் சிஇஓ சத்ய நாதெல்லாவின் மகன் ஜெயின் நாதெல்லாவின் மறைவு குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் இரங்கல் தெரிவித்து தனது ஊழியர்களுக்கு இமெயில் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.