தோனியை மனைவியுடன் சந்தித்த புதுமாப்பிள்ளை!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரான யுஜ்வேந்திரா சாஹல் நடன இயக்குனர் மற்றும் யூடியூப் பிரபலம் தனஸ்ரீ வெர்மா என்பவரை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள், இந்நாள் வீரர்கள் வாழ்த்துக்களை குவித்தனர் என்பதும் தெரிந்ததே.
திருமணத்திற்கு பின்னர் யுஜ்வேந்திரா சாஹல் வெளியிட்ட திருமண புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் இன்று தல தோனியை புதுமாப்பிள்ளை சாஹல் தனது மனைவியுடன் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சாஹல்-தனஸ்ரீ வெர்மா தம்பதிக்கு தோனி மற்றும் சாக்சி வாழ்த்து தெரிவித்தனர்.
தோனி மற்றும் அவருடைய மனைவி சாக்சியுடன் சாஹல்-தனஸ்ரீவெர்மா தம்பதியினர் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன. இதுகுறித்து சாஹல் தனது சமூக வலைத்தளத்தில், ‘தோனியை சந்தித்தது மிகப்பெரிய சந்தோஷம் மற்றும் ஆசிர்வாதங்கள் கிடைத்தது என்று குறிப்பிட்டுள்ளார்
Extremely happy & blessed ❤️ pic.twitter.com/yMlQYomCe9
— Yuzvendra Chahal (@yuzi_chahal) December 29, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com