லைகர் விலங்கிடம் மண்ணைக் கவ்விய யுவராஜ் சிங்… வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பவுண்டரிகளுக்கும் சிக்ஸர்களுக்கும் பெயர்போன இந்தியக் கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் ஒரு பூங்காவில் உள்ள விலங்கிடம் கயிறு இழுக்கும்போட்டியில் தோற்றுப் போயிருக்கிறார். இதுகுறித்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தாவரங்களில் கலப்பினத்தை உருவாக்குவது போலவே ஆண் சிங்கம் மற்றும் பெண் புலியை வைத்து உருவாக்கப்பட்ட கலப்பினம்தான் லைகர். இந்த வகை விலங்கினம் பார்ப்பதற்கு பெண் சிங்கம் போலவே இருக்கும். ஆனால் முதுகில் கோடுகள் இருப்பதால் புலியா என்ற சந்தேகமும் கூடவே வந்துவிடும். 12 அடி நீளம் மற்றும் 400 கிலோ எடையுடன் வளரக்கூடிய இந்த லைகர் விலங்கினம் தற்போது உலகம் முழுவதும் கலப்பினமாக உருவாக்கப்பட்டு பாராமரிக்கப்படுகிறது.
கிரிக்கெட் வீரரான யுவராஜ்சிங் சமீபத்தில் துபாயில் உள்ள Fame Park எனும் தனியார் உயிரியியல் பூங்காவிற்குச் சென்றுள்ளார். அங்குள்ள லைகர் விலங்கிடம் கயிறு இழுக்கும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். ஒரு பக்கம் கயிற்றை லைகர் இழுக்க மற்றொரு பக்கம் கயிற்றை யுவராஜ் சிங் மற்றும் அவருடைய 2 நண்பர்கள் சேர்ந்து இழுக்கின்றனர். ஆனால் யுவராஜ் சிங் குழு தோல்வியுறுகிறது. இதுகுறித்த வீடியோதான் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மேலும் உயிரியியல் பூங்காவில் உள்ள ஓட்டகசிவிங்கி, கரடி மற்றும் பாம்பு போன்ற உயிரினங்களுக்கு உணவளித்து மகிழ்ந்த யுவராஜ் சிங் அவற்றுடன் புகைப்படங்களை எடுத்து கொண்டுள்ளார். லைகருடன் கயிறு இழுத்து தோற்றுபோன வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் கவனம் பெற்றிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout