கோலிக்கு கடிதம் எழுதி உருகவைத்த முன்னாள் வீரர்… ரசிகர்களே நெகிழ்ந்த சம்பவம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய அணியில் ஹிட் மேன் வரிசையில் வைத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வீரர் ஒருவர், விராட் கோலியைப் பாராட்டி கடிதம் எழுதியிருக்கும் தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இந்திய அணியில் முன்னணி பேட்ஸ்மேனாக இருந்துவரும் விராட் கோலி கேப்டன்சி பிரச்சனையால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்பட்டது. தற்போது பயோபபுள் முறையில் இருந்து வெளியேறியதால் மேற்கு இந்திய அணிகளுக்கு எதிரான போட்டிகளிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக ஃபார்ம் அவுட் ஆகியிருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் பிசிசிஐ நேரடியாகவே ஏன் பேட்டிங்கில் சொதப்பி வருகிறீர்கள் எனக் கேள்வியெழுப்பிய நிலையில் கோலி பயோ பபுள் முறை அழுத்தத்தைக் கொடுப்பதாகவும் ஓய்வே இல்லாமல் விளையாடி வருவதால் கவனம் செலுத்த முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார். இதையடுத்து கோலிக்கும், ரிஷப் பண்டுக்கும் பிசிசிஐ விடுமுறை அளித்திருக்கிறது.
இந்நிலையில் மேற்கு இந்திய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டி20 போட்டியில் விராட் கோலியின் பேட்டிங்கை பார்த்த ரசிகர்கள் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். காரணம் முதல் போட்டியில் படு சொதப்பலாக ஆக்ரோஷத்துடன் விளையாடிய கோலி எப்போதும் போல அவுட்டாகி நடையைக் கட்டினார். ஆனால் 2ஆவது போட்டியில் நிதானமாக விளையாடி நீண்ட நாட்களுக்குப் பிறகு அரைச்சதத்தை அடித்துள்ளார். இதனால் கோலி பழைய ஃபார்முக்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த விஷயத்தை மனதார பாராட்டிய யுவராஜ் சிங் ஹே விராட் நீ கிரிக்கெட்டில் எப்படி வளர்ந்து வந்தாய் என்பதை அருகில் இருந்து பார்த்துள்ளேன். இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களுடன் சேர்ந்து பயணித்த அந்த பொடிப்பையன் கோலி இன்று புதிய தலைமுறையையே வழிநடத்தும் ஜாம்பவானாக உருவெடுத்திருக்கிறார்.
களத்தில் உன்னுடைய உத்வேகம் மற்றும் ஆர்வம் ஆகியவை ஒவ்வொரு இளைஞனுக்கும் இந்திய அணி ஜெர்ஸியை அணிய வேண்டும் என்ற எண்ணத்தை கொடுக்கிறது. ஒவ்வொரு வருடமும் இந்திய கிரிக்கெட்டை வேறு ஒரு தரத்திற்கு நீ எடுத்துச் சென்றுள்ளாய். கேப்டன்சியில் ஜாம்பவனாக இருந்த உன்னை இனி பழைய ரன் சேஸிங் மிஷன் கோலி போன்று பார்க்க ஆவலுடன் உள்ளேன்.
உனது தோழனாக அணிக்குள் எப்போதும் இருந்திருக்கிறேன். ஆட்டம், பாட்டம், சமையல் என எத்தனையோ நினைவலைகள் உள்ளன. எனவே அப்போது இருந்த அதே நெருப்பு இன்னும் உன்னுள்ளேயே இருக்க வேண்டும். கிரிக்கெட்டில் நீ ஒரு சூப்பர் ஸ்டார் தான். நாட்டை பெருமைப்படுத்து என உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் இந்தக் கடிதத்துடன் யுராஜ் சிங், கோலிக்காக ஒரு ஸ்போர்ட்ஸ் ஷு ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார். யுவராஜ் சிங்கின் இந்தச் செயலைப் பார்த்த ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்து இப்படியொரு மனிதாரா நீங்கள் என்று அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com