பிறந்த நாளன்று விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்…
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் தன்னுடைய பிறந்த நாளன்று டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். மேலும் இந்தப் போராட்டத்தில் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் சமூகமான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் தனது தந்தை விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொணடு ஆத்திரத்துடன் வெளிப்படுத்திய வார்த்தைகள் தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோகிராஜ் சிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டு சில கருத்துகளை வெளிப்படுத்தி இருந்தார். அதில் போராட்டத்தை வலிமையாக்க வேண்டும் என்றால் மத்திய அரசு வழங்கிய விருதுகளை விளையாட்டு வீரர்கள் திரும்ப கொடுக்க வேண்டும் என்று முழ்க்கமிட்டார். இந்த கருத்து பொதுவெளியில் சர்ச்சையை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தக் கருத்தில் இருந்து தான் வேறுபடுவதாக யுவராஜ் சிங் தற்போது விளக்கம் அளித்து இருப்பதோடு தனது தந்தையின் சித்தாந்தத்தில் இருந்து, தான் விலகி நிற்பதாகவும் கூறி இருக்கிறார்.
39 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் யுவராஜ் சிங், தனது டிவிட்டர் பக்கத்தில் “சந்தேகத்திற்கு இடமின்றி விவசாயிகள் தேசத்தின் உயிர்நாடி. அமைதியான உரையாடலின் மூலம் அவர்கள் தங்கள் பிரச்சனையை தீர்க்க முடியும்” என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும், “பிறந்த நாள் என்பது ஒரு விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு வாய்ப்பாகும். இந்த பிறந்தநாளை கொண்டாடுவதை விட நம் விவசாயிகளுக்கும் நம் அரசாங்கத்திற்கும் இடையில் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளுக்கு விரைவாக தீர்வு கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பிரார்த்தனை செய்கிறேன்” எனப் பதிவிட்டு உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு யுவராஜ்சிங்கின் தந்தையான யோகிராஜ் சிங், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி சில கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். அதில் “விவசாயிகள் சரியானதைக் கோருகிறார்கள். அரசாங்கம் அவற்றைக் கேட்க வேண்டும். இது தொடர்பாக அரசாங்கம் தீர்வுகளை கொண்டு வரவேண்டும் என்பது மிகவும் அவசியம். விவசாயிகள் போராட்டத்திற்காக அவர்களின் மதிப்பு மிக்க விருதை திருப்பித் தரும் அனைத்து விளையாட்டு வீரர்களையும் நான் ஆதரிக்கிறேன்” எனக் கூறியிருந்தார்.
இந்தக் கருத்தில் இருந்து தான் விலகுவதாக தற்போது விளக்கம் அளித்து இருக்கிறார் யுவராஜ் சிங் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு கொரோனா தொற்றுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் யுவராஜ் சிங் வலியுறுத்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
— Yuvraj Singh (@YUVSTRONG12) December 11, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout