ஆண் குழந்தைக்குத் தந்தையான பிரபல இந்தியக் கிரிக்கெட் வீரர்… வாழ்த்தும் ரசிகர்கள்!

இந்தியக் கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராகவும் ஆல்ரவுண்டராகவும் இருந்த முன்னாள் வீரர் யுவராஜ்சிங் தனக்கு ஆண்குழந்தை பிறந்துள்ள தகவலை அறிவித்துள்ளார். இதனால் யுவராஜ் சிங் மற்றும் ஹேசல் கீச் தம்பதிகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரராக இருந்துவந்த யுவராஜ் சிங்கிற்கு இந்தியா முழுக்கவே ரசிகர்கள் ஏராளம். இவர் கடந்த 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பையின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியவர். பேட்டிங்கைத் தவிர ஆல்ரவுண்டராகவும் சிறந்த பங்களிப்பை செய்துவந்தார். பின்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்த இவர் கடந்த 2017 க்குப்பிறகு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்துவந்தார்.

தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்திவந்த யுவராஜ் கடந்த 2019இல் அனைத்துவிதப் போட்டிகளில் இருந்தும் ஓய்வுப்பெறுவதாக அறிவித்தார். இதுகுறித்த வீடியோவில் யுவராஜ்சிங் மனஅழுத்தத்தோடு சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டதை அடுத்து ரசிகர்களும் வருத்தத்தை வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் தற்போது யுவராஜ் சிங் தனது முதல் குழந்தையை வரவேற்றுள்ள தகவலை வெளியிட்டு இருக்கிறார். கடந்த 2016 ஆம் நடிகை ஹேசல் கீச் என்பவரை பாரம்பரிய முறையில் திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு 5 வருடங்கள் கழித்து முதல் குழந்தை பிறந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ரசிகர்கள் யுவராஜ் சிங்-ஹேசல் கீச் தம்பதிகளுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர் .

More News

இந்த ஆண்டு பத்ம விருதை நிராகரித்த சினிமா பிரபலங்கள்!

குடியரசு தினத்தையொட்டி நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகள்

பாட்டியுடன் “புஷ்பா“ பாடலுக்கு நடனமாடிய பிரபல கிரிக்கெட் வீரர்… வைரலாகும் வீடியோ!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராகவும் ஆல்ரவுண்டராகவும்

22 ஆண்டுகளுக்கு முன் வெளியான கமல் படத்தின் ரீமேக் உரிமையை பெற்ற ஷாருக்கான்!

22 ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசன் நடித்த திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

பத்ம விருதை நிராகரித்த மூத்தத் தலைவர்… யார் இந்த புத்தத்தேவ் தாக்கரே?

இந்தியாவில் கலை, இலக்கியம், மருத்துவம், சமூகச்சேவை எனப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின்

திருமணம் செய்யாத மகனால் தற்கொலைக்கு முயன்ற தந்தை... தடம் மாறுகிறதா இளையச் சமூகம்?

சீனாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் திருமணம் செய்துகொள்ளாத