கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்… ஒரு மணிநேரத்தில் ஜாமீன்…என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய அணியின் முன்னாள் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டு பின்பு ஒரு மணிநேரத்தில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளார்.
கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடைபெற்ற ஒரு நேரலை நிகழ்ச்சியில் யுவராஜ்சிங் கலந்துகொண்டார். அப்போது இந்தியக் கிரிக்கெட் பவுலர் யுவேந்திர சாஹலுடன் யுவராஜ்சிங் பேசிக் கொண்டிருந்தபோது சாதி ரீதியான சில வார்த்தைகளை அவர் பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது. இந்தச் சம்பவம் ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஹரியானாவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் யுவராஜ் சிங்கின் செயல், பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் அமைந்திருந்ததாக ஹரியானா காவல் துறையிடம் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரை அடிப்படையாகக் கொண்டு ஹரியானா போலீசார் யுவராஜ்சிங் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
சாதி ரீதியான பேச்சுத் தொடர்பாக ஹன்சி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் நேற்று யுவராஜ்சிங் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் 3 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் யுவராஜ்சிங்கை கைதுசெய்துள்ளனர். அதையடுத்து சில மணிநேரங்களில் யுவராஜ்சிங்கிற்கு ஜாமீன் கிடைத்தாகவும் அதனால் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக தனது பேச்சு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக யுவராஜ்சிங் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout