இந்தியன் 2 திரைப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தையா? வியக்க வைக்கும் புதுத்தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,November 02 2022]

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்துவரும் ‘இந்தியன் 2‘ திரைப்படத்தில் பிரபல இந்தியக் கிரிக்கெட் வீரர் ஒருவரின் தந்தை நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.

உலகநாயகன் கமல், இயக்குநர் ஷங்கர், லைகா புரொடெக்ஷன் மற்றும் அனிருத் கூட்டணியில் ‘இந்தியன் 2‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. பின்னர் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து மற்றும் தயாரிப்பு நிறுவனத்துடன் இயக்குநர் ஷங்கருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு போன்ற காரணங்களால் படப்பிடிப்பு முற்றிலும் நின்றுவிட்ட நிலையில் தற்போது பிரச்சனைகள் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘இந்தியன் 2‘ படத்திற்கான பூஜை மீண்டும் போடப்பட்டு தற்போது படப்பிடிப்பு நடந்துவருகிறது. மேலும் இந்தத் திரைப்படத்தை தற்போது லைகா புரொடெக்ஷனுடன் இணைந்து உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனமும் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் பிரபல கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் நடிக்கவிருக்கிறார். இதை உறுதிப்படுத்தும் விதமாக யோகராஜ் சிங் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங் ஒரு கிரிக்கெட் வீரராக தனது வாழ்க்கையைத் துவங்கியவர். இவர் இந்திய அணிக்காக 6 ஒருநாள் போட்டி மற்றும் 1 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடியுள்ளார். மேலும் நடிகராக 50 க்கும் மேற்பட்ட இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் யோகராஜ் சிங் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

'ஏதோ பிரச்சனை இருக்குன்னு மட்டும் தெரியுது.. கதிர் நடித்த 'யூகி' டீசர் ரிலீஸ்

பரியேறும் பெருமாள், விஜய் நடித்த பிகில்  உள்பட பல திரைப்படங்களில் நடித்த கதிர் நடித்த 'யூகி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி உள்ளது. 

நயன்தாராவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு: ரிலீஸ் எப்போது?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. 

பிக்பாஸ் வீட்டில் 'விக்ரம்' பட ரகசியத்தை போட்டு உடைத்த மைனா!

 உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படத்தில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் மகேஸ்வரி மற்றும் மைனா ஆகிய இருவருமே நடித்து இருந்தனர் என்பதும்

கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல பாடகர் உயிரிழப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தென்கொரியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஹாலோவீன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகரும் நடிகருமான லீ ஜிஹான்(24) உயிரிழந்துள்ளார்.

பிக்பாஸ் ஆயிஷாவுக்கு எத்தனை காதலர்கள்? எத்தனை திருமணம்? முன்னாள் காதலர் கூறிய திடுக் தகவல்!

 பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஆயிஷாவின் முன்னாள் காதலர் பேட்டி அளித்திருக்கும் நிலையில் அந்த பேட்டியில் அவர் ஆயிஷாவுக்கு ஏற்கனவே இரண்டு முரை திருமணம்