மகளின் வீடியோவில் 'ஆனந்த யாழை' இணைத்த யுவன்: வைரல் வீடியோ!

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கம்போஸ் செய்த ஆயிரக்கணக்கான பாடல்களில் ’ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற பாடல் மிகவும் ஸ்பெஷலானது என்பதும் ’தங்க மீன்கள்’ என்ற படத்திற்காக இடம்பெற்ற இந்த பாடலை நா முத்துக்குமார் எழுதினார் என்பதும், ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடி இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகள் வைத்திருக்கும் ஒவ்வொரு தகப்பனாருக்கும் இந்த பாடல் ஒரு தேசிய கீதம் என்றால் அது மிகை ஆகாது. இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா தனது மகளுடன் நடந்து செல்லும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து அதன் பின்னணியில் ’ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ என்ற பாடலைப் பயன்படுத்தியுள்ளார் .மகளின் கையைப் பிடித்துக்கொண்டு அவர் நடந்து செல்லும் இந்த காட்சிக்கும் இந்த பாடலில் உள்ள வரிகள் மிக பொருத்தமாக இருப்பதை அடுத்து இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவை பார்க்கும் ஒவ்வொரு தந்தையும் தனது மகளின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து செல்வது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதாக பலர் கமெண்ட்ஸ்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

மூன்று மாதமாக காத்திருந்த ரசிகர்....! யுவன் கொடுத்த சர்ப்ரைஸ் ...!

தொடர்ந்து மூன்று மாதங்களாக யுவனின் போஸ்டுகளுக்கு ரிப்ளை செய்து வந்த ரசிகர்கருக்கு, யுவன் அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளார்.

'பிகில்' நடிகை ரெபா மோனிகாவின் வேற லெவல் திறமை: வைரல் வீடியோ

தளபதி விஜய் நடித்த 'பிகில்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரெபா மோனிகா என்பது தெரிந்ததே. பிகில் படத்தின் வெற்றியை அடுத்து தமிழில் 'எப்ஐஆர்' 'மழையில் நனைகிறேன்'

லெஜண்ட் சரவணனின் ஜோடி இப்போ சேரு பூசின பாடி: வைரல் புகைப்படம்!

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டையர்கள் இயக்கி வருகின்றனர்

கோக் பாட்டிலை ஒதுக்கிய தலைவன் கிறிஸ்டியானோ… பொறுப்புணர்வுக்கு குவியும் வாழ்த்து!

கால்பந்து உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்துவரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு

190 நாடுகளில் இத்தனை மொழிகளில் வெளியாகிறதா தனுஷின் 'ஜகமே தந்திரம்'?

தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜனவரி 18-ஆம் தேதி இந்த படம் நெட்பிளிக்ஸ்