மூன்று மாதமாக காத்திருந்த ரசிகர்....! யுவன் கொடுத்த சர்ப்ரைஸ் ...!
Send us your feedback to audioarticles@vaarta.com
தொடர்ந்து மூன்று மாதங்களாக யுவனின் போஸ்டுகளுக்கு ரிப்ளை செய்து வந்த ரசிகர்கருக்கு, யுவன் அதிர்ச்சி ஒன்றை கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கொடி கட்டிப்பறந்து வரும் இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. தனது தந்தையே போலவே, இசையில் தனக்கென ஒரு பாணி அமைத்து, கோடிக்கணக்கான ரசிகர்களை சம்பாதித்துள்ளார் யுவன். சிம்புவின் மாநாடு, அஜித்தின் வலிமை, மன்னவன் வந்தானடி, மாமனிதன், எரியும் கண்ணாடி, ஸ்டார்,பிளான் பண்ணி பன்ணனும் மற்றும் டிக்கிலோனா உள்ளிட்ட படங்கள் தற்போது யுவனின் கைவசத்தில் உள்ளன.
இவர் அவ்வப்போது தன்னுடைய ரசிகர்களின் கமெண்டுகளுக்கு பதிலளித்து வருவார். இந்நிலையில் ரசிகர் ஒருவரின் கமெண்டுக்கு பதில் கூறியுள்ளார். அண்மையில் தன்னுடைய குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு "எவ்வளவு சீக்கிரம் இவங்க வளர்கிறார்கள்" என பதிவிட்டு இருந்தார். அப்புகைப்படத்திற்கு கீழே ரசிகர் ஒருவர் "தல மூணு மாசமாக கேக்கிறேன், ப்ளீஸ் ஒரு லவ் யூ ப்ரோ சொல்லுங்க" என பதிவிட்டிருந்தார். இதற்கு யுவனும் "லவ் யூ ப்ரோ" என ரிப்ளை செய்துள்ளார். யுவனின் இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com