பிறந்த நாளில் யுவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி ஸாஃப்ரூன் நிசா!

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடியதை அடுத்து அவருடைய மனைவி ஸாஃப்ரூன் நிசா யுவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நேற்று யுவன் சங்கர் ராஜாவை டின்னருக்கு செல்லலாம் என்று அழைத்துச் சென்ற மனைவி ஸாஃப்ரூன் நிசா, அவருக்கே தெரியாமல் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டி ஒன்றுக்கு அழைத்துச் சென்றார்.

சென்னை அண்ணா நகரில் நடந்த இந்த பார்ட்டியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. பார்ட்டிக்கு முதல் நபராக வந்த சிம்பு ’லூசு பெண்ணே லூசு பெண்ணே’ என்ற பாடலை பாடி விட்டு கிளம்பினார். அதன் பிறகு சந்தோஷ் நாராயணன் தனது மனைவி மற்றும் மகளுடன் வந்து இருந்தார் என்பதும், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தரண் குமார் ஆகியோர் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இயக்குனர் விஷ்ணுவர்த்தன், பிரதீப் உள்பட பல இயக்குனர்களும் ஞானவேல்ராஜா, சுரேஷ் காமாட்,சி சிவி குமார் உள்பட உள்ள சில தயாரிப்பாளர்களும் நடிகர்கள் அசோக்செல்வன், மெட்ரோ சிரிஷ், நடிகைகள் சுனைனா, ரைசா வில்சன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் பல பாடல்கள் பாடப்பட்டன என்பதும் குறிப்பாக தெருக்குரல் அறிவு, யுவனுக்காக எழுதி பாடிய பாடல் அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக பார்ட்டி முடியும் சில நிமிடங்களுக்கு முன்னர் தனுஷ் வருகை தந்தார் என்பதும் அவர் ’ரவுடி பேபி’ பாடலை பாடி பாடி விட்டு தெருக்குரல் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் மகன் தீயுடன் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.