டி.இமான் இசையில் பாட்டு பாடிய யுவன்: எந்த படத்தில் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி இமான் இசையில் மற்றொரு முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா ஒரு பாடலை பாடி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஆர்யா நடிக்கும் அடுத்த படம் ’கேப்டன்’ என்றும் இந்த படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கி வருகிறார் என்பதையும் பார்த்தோம். இந்த கூட்டணியில் உருவான ’டெடி’ திரைப்படம் நல்ல வெற்றி பெற்ற நிலையில் தற்போது மீண்டும் அதே கூட்டணி இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்து வரும் நிலையில் இந்த படத்தின் ஒரு பாடலை யுவன்சங்கர்ராஜா பாடி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை மதன் கார்க்கி இயக்கியுள்ளார். இந்த பாடல் விரைவில் சிங்கிள் பாடலாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்யா, சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, காவ்யா ஷெட்டி உள்பட பலர் நடித்துள்ள இந்த படம், யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.
Thank you so much @thisisysr sir for singing this special song for in #Captain! Can't wait to share this @immancomposer magical in @madhankarky's words! @arya_offl @SimranbaggaOffc #AishwaryaLekshmi @thinkmusicindia @ThinkStudiosInd #TheShowPeople @RedGiantMovies_ @DoneChannel1 pic.twitter.com/H3rtgN8SCh
— Shakti Soundar Rajan (@ShaktiRajan) June 10, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com