தற்கொலை செய்து கொள்ளலாம்ன்னு இருந்தேன்: யுவன்ஷங்கர் ராஜா
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன்சங்கர்ராஜாவின் இஸ்லாம் மத மாற்றம் குறித்து சர்ச்சைக்குரிய பல பதிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளிவந்தது. இதற்கான விரிவான பதிலை அவரது மனைவி ஷாஃப்ரூன் நிஷா அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார் என்பதும் அந்த பதிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் சமீபத்தில் யுவன்சங்கர்ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடியாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒரு ரசிகர் ’உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப் பெரிய பயம் என்ன’ என்ற கேள்விக்கு பதிலளித்த யுவன் சங்கர் ராஜா, ‘இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக எனக்கும் தற்கொலை எண்ணங்கள் வந்தது. ஆனால் அவற்றையெல்லாம் கடக்க எனக்கு இஸ்லாம் மதம் பெரிதும் உதவியது’ என்று கூறியுள்ளார்.
நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு ’எனக்கு பல வழிகளில் ஊக்கம் அளித்தவர் அவர்’ என்று தெரிவித்தார். அஜித்தின் ‘வலிமை’ படத்தின் இசை பணிகள் குறித்த கேள்விக்கு, ‘வலிமை படத்தின் இசை பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன, கொரோனா காரணமாக அந்த பணிகள் தாமதமாகின்றன’ என்று தெரிவித்துள்ளார். இதேபோன்று பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளுக்கு யுவன்சங்கர்ராஜா பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Yuvan ?? pic.twitter.com/XBybLw8F7V
— Unknown (@Mysteri13472103) July 3, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout