சிம்பு படத்தின் இசையமைப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு

  • IndiaGlitz, [Saturday,June 18 2016]

சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு' சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் நடித்துள்ள மற்றொரு படமான 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளது.
இந்நிலையில் 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.
இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க யுவன்ஷங்கர் ராஜா தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை யுவன் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் விஜய்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' மற்றும் எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி 2' ஆகிய படங்கள் மிகப்பெரிய பட்ஜெட்டில்...

சென்னை-28 இரண்டாம் பாகத்தில் 6 இயக்குனர்கள்

வெங்கட்பிரபு இயக்கிய முதல் படமான 'சென்னை 600028' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் தற்போது இயக்கி வருகிறார்...

அஜித்-விஜய்க்கு அப்பாவாக நடிக்க ஆசை. சொன்னது யார் தெரியுமா?

நடிகராக வேண்டும் என்ற கனவுடன் கோலிவுட்டில் நுழைந்து பின்னர் மேனேஜர், நிர்வாகத்தயாரிப்பாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்தவர் செந்தில்...

சீயான் விக்ரம் 'இருமுகன்' டீசர் ரிலீஸ் தேதி

சீயான் விக்ரம் நடிப்பில் 'அரிமாநம்பி' இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கி வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு மிகவிரைவில் நிறைவடையவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

தனுஷின் 'வடசென்னை'யில் விஜய் பட வில்லன்

இளையதளபதி விஜய் நடிக்கும் 'விஜய் 60' படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்து வரும் டேனியல் பாலாஜி, பத்து வருடங்களுக்கு பின்னர் விஜய்யை மீண்டும் சந்தித்ததாகவும், பத்து வருடங்களுக்கு பின்பும் அதே பாசத்துடன் தன்னை வரவேற்றதாகவும் சமூக வலைத்தளத்தில் கூறியிருந்ததை சில நாட்களுக்கு முன் பார்த்தோம்.