close
Choose your channels

ராணா-யுவன்ஷங்கர் ராஜா இணையும் தமிழில் ஒரு சரித்திர படம்

Saturday, April 30, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
எஸ்.எஸ்.ராஜமவுலியின் பாகுபலி' படத்தில் பிரபாஸூக்கு இணையாக வில்லனாக நடித்து மிரட்டிய ராணா அதன் பின்னர் 'பெங்களூர் நாட்கள்' படத்தில் நடித்தார். தற்போது தனுஷ்-கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் வில்லனாகவும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் ஒரு தமிழ்ப்படத்தில் நாயகனாக நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

கிருஷ்ணா நடித்த 'கழுகு' படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கவுள்ள அடுத்த படத்தில் ராணாதான் ஹீரோ என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படம் சரித்திர பின்னணியை கொண்டது என்றும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வரும் ஜூலை முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இந்த படத்தை ராஜாராஜன் தயாரிக்கின்றார். தற்போது இந்த படத்தின் நாயகி தேர்வு நடைபெற்று வருவதாகவும், இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படம் குறித்த மேலும் சில தகவல்கள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment