தொடர் வெற்றி நாயகனின் அடுத்த படத்தில் யுவன்ஷங்கர் ராஜா!

  • IndiaGlitz, [Saturday,August 31 2019]

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் கோலிவுட் திரையுலகிலகினர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இந்த நிலையில் தொடர் வெற்றி பெற்ற நாயகனான ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

'டிக் டிக் டிக்' 'அடங்கமறு', 'கோமாளி' என ஹாட்ரிக் தொடர் வெற்றி பெற்ற ஜெயம்ரவி நடித்து வரும் அடுத்த படம் 'ஜன கன மன'. இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் டாப்ஸி உள்பட பலர் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தன. ஆனால் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.

'என்றென்றும் காதல்' இயக்குனர் அகமது இயக்கி வரும் இந்த படத்தில் ஈரான் நாட்டின் நடிகை ல்னாஸ் நோரோஸி மற்றும் 'செக்க சிவந்த வானம்' படத்தில் சிம்பு ஜோடியாக நடித்த டயானா எரப்பா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஒரே ஷெட்யூலில் முடிவடையும் தனுஷின் அடுத்த படம்!

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'என்னை நோக்கி பாயும் தோட்டா', 'அசுரன்' மற்றும் 'பட்டாஸ்' ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில்

டுவிட்டர் சி.இ.ஓவுக்கே இந்த நிலைமையா? ஹேக்கர்கள் கொடுத்த அதிர்ச்சி

அரசியல்வாதிகள், பிரபலமான நட்சத்திரங்கள் மற்றும் தொழிலதிபர்களின் டுவிட்டர் கணக்குகளை அவ்வப்போது ஹேக்கர்கள் ஹேக் செய்து அதிர்ச்சி தருவது வழக்கமான ஒன்றே.

'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் இணைந்த 'கோலமாவு கோகிலா' டீம்

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'நம்ம வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா

தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்குகிறதா 'சங்கத்தமிழன்'?

வரும் தீபாவளி அன்று விஜய்யின் 'பிகில்',  விஜய்சேதுபதியின் 'சங்கத்தமிழன்' மற்றும் கார்த்தியின் 'கைதி' ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரபூர்வ அறிவிப்புகள்

ஜெயம் ரவியின் படத்தில் இணையும் 'செக்க சிவந்த வானம்' பட நடிகை!

ஜெயம் ரவி நடிக்கும் அடுத்த படமான 'ஜன கன மன' என்ற படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் டாப்சி மற்றும் ஈரான் நாட்டின் நடிகை ல்னாஸ் நோரோஸி