நேற்று தந்தை.. இன்று மகன்.. பாசத்தை பரிமாறும் இளையராஜா - யுவன் புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசைஞானி இளையராஜா குடும்பத்தினர் தற்போது மொரீஷியஸ் நாட்டில் சுற்றுலா சென்றுள்ளனர் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின என்பதையும் பார்த்தோம்
குறிப்பாக நேற்று வெளியான புகைப்படத்தில் இளையராஜா தனது மகன் யுவன் சங்கர் ராஜாவுக்கு அன்புடன் சாப்பாடு ஊட்டும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர் என்பதும் இந்த புகைப்படத்துக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்தது என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் நேற்று தந்தை மகனுக்கு சாப்பாடு ஊட்டிய புகைப்படம் வைரலான நிலையில் இன்று மகன் தந்தைக்கு சாப்பாடு ஊட்டும் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது யுவன் தனது சமூக வலைதள பக்கத்தில் இளையராஜாவுக்கு யுவன் சாப்பாடு ஊட்டும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. குறிப்பாக
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்
என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பலர் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளையராஜா குறித்த சர்ச்சை சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் இதை எதையுமே கண்டுகொள்ளாமல் இளையராஜா தனது குடும்பத்துடன் நிம்மதியாக ஓய்வெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இசை உலகை பொருத்தவரை இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் மேதைகள் என்றாலும் தந்தை மகன் என்ற உறவின் பாசப்பிணைப்பில் இருவரும் மொரிசியஸ் நாட்டில் தங்கள் பாசத்தை பரிமாறி கொள்ளும் காட்சிகள் கண்கொள்ளா காட்சிகளாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
— Raja yuvan (@thisisysr) May 4, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com