காபி வித் காதல் ; யுவனின் இசையில் வெளியான பேபி கேர்ள் ஆல்பம்
Send us your feedback to audioarticles@vaarta.com
அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் ஏசிஎஸ் அருண்குமார் இணைந்து தயாரித்து வரும் படம் 'காபி வித் காதல். இயக்குனர் சுந்தர்.சி தனது வழக்கமான கலகலப்பான பாணியில் இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் கதாநாயகர்களாக நடிக்க அம்ரிதா ஐயர், மாளவிகா சர்மா, ரைசா வில்சன் , ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தில் இருந்து ஏற்கனவே ரம்பம்பம் ஆரம்பம் என்கிற ரீமிக்ஸ் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக பேபி கேர்ள் என்கிற இன்னொரு பாடல் வெளியாகி உள்ளது.
நாயகன் நாயகி இருவருக்கும் இடையேயான நட்பு ஒரு கட்டத்தில் காதலாக மாறுகிறது. அந்த தருணத்தில் அந்த புதிய அன்பு கிடைப்பதன் மூலம் நாயகன் இதயத்தில் ஒரு மாற்றம் நிகழ்கிறது. அதன்பின் அவன் பார்க்கும் பார்வையில் இதுவரை அவன் பார்த்த உலகம் எல்லாமே தற்போது புதிதாக வித்தியாசமாக தெரிகிறது. இந்த சூழலை மையப்படுத்தி
“என்ன இது
புதிதாய் புதிதாய் புதிதாய்
எனக்குள் ஏததா
புதிராய் புதிராய்
இரண்டாம் மூச்சுக் காற்று
உள்தே அடிக்குதே”
என நாயகன் பாடுவது போல இந்த பாடல் உருவாகி உள்ளது.
பா.விஜய் எழுதியுள்ள இந்த பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியுள்ளார் அதேசமயம் இதே பாடலை யுவன் சங்கர் ராஜா பாடி, ஒரு சிறப்பு வீடியோ ஆல்பமாக தற்போது யூட்யூப் தளத்தில் இந்த பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்தப்பாடலில் இடையே இடம்பெறும் ராப் பாடல் வரிகளை அசல் கோலார் என்பவர் பாடியுள்ளார். U1 ரெக்கார்ட்ஸ் சார்பாக இந்தப்பாடலை கே.குமரகுருபரன் ஒலிப்பதிவு செய்துள்ளார்.
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர்,ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், திவ்யதர்ஷினி (டிடி), விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், அருணா பால்ராஜ், பேபி விர்த்தி உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
சுந்தர் சி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் E.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில், ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments