இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கியதற்கு இதுதான் காரணம்: யுவன்ஷங்கர் ராஜா விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென இன்று முடங்கியதாக வெளியான தகவலை அடுத்து அவரை அதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் இன்று காலை திடீரென முடங்கியது. இதனை அடுத்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள் என்பதும் குறிப்பாக சமீபத்தில் வெளியான 'கோட்’ படத்தில் இடம்பெற்ற ’விசில் போடு’ பாடலுக்கு அதிகமாக நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததால்தான் இன்ஸ்டா பக்கம் யுவன் சங்கர் ராஜாவால் டெலிட் செய்யப்பட்டது என்றும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா சற்று முன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் ‘தனது இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கியதற்கு தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என்றும் என்னுடைய குழுவினர் அதை மீட்க பணி செய்து வருகிறார்கள் என்றும் விரைவில் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மீட்கப்படும் என்றும் நான் மீண்டும் வருவேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கியதற்கு முழுக்க முழுக்க தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் அந்த பக்கம் மீட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Hey guys,
— Raja yuvan (@thisisysr) April 18, 2024
Thank you for the concerned messages. It's just a technical error, my team is trying to recover my Insta account and I'll be back soon 😊
Love, always!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments