இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கியதற்கு இதுதான் காரணம்: யுவன்ஷங்கர் ராஜா விளக்கம்..!

  • IndiaGlitz, [Thursday,April 18 2024]

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென இன்று முடங்கியதாக வெளியான தகவலை அடுத்து அவரை அதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் இன்று காலை திடீரென முடங்கியது. இதனை அடுத்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள் என்பதும் குறிப்பாக சமீபத்தில் வெளியான 'கோட்’ படத்தில் இடம்பெற்ற ’விசில் போடு’ பாடலுக்கு அதிகமாக நெகட்டிவ் விமர்சனங்கள் வந்ததால்தான் இன்ஸ்டா பக்கம் யுவன் சங்கர் ராஜாவால் டெலிட் செய்யப்பட்டது என்றும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா சற்று முன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் ‘தனது இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கியதற்கு தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என்றும் என்னுடைய குழுவினர் அதை மீட்க பணி செய்து வருகிறார்கள் என்றும் விரைவில் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மீட்கப்படும் என்றும் நான் மீண்டும் வருவேன்’ என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கியதற்கு முழுக்க முழுக்க தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் அந்த பக்கம் மீட்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

ஜாதக தோஷங்கள் மற்றும் யோகங்கள் - ஜோதிடர் Soorth Babu விளக்கம்

ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலில் ஜோதிடர் மற்றும் ஆன்மீக ஞானி திரு. Soorth Babu அவர்கள் அளித்த பேட்டி, ஜோதிடத்தின் ஆர்வலர்களை கவர்ந்தது.

ஏ.ஆர்.ரகுமானின் வித்தியாசமான தேர்தல் பிரச்சாரம்.. இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு..!

தமிழகத்தில் நாளை பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. இந்த நிலையில் தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை

திடீரென காணாமல் போன யுவன்ஷங்கர் ராஜாவின் இன்ஸ்டா பக்கம்.. என்ன நடந்தது?

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென டெலிட் செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனக்கு வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்துவிட்டார்கள்: மன்சூர் அலிகான் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..!

வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் நேற்று திடீரென பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

சன் டிவி சீரியல் நடிகருக்கு இன்று திருமணம்..  மணமகள் யார் தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்..

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'அன்பே வா' என்ற தொடரின் நாயகனுக்கு இன்று மகாபலிபுரம் அருகே உள்ள ரிசார்ட்டில் திருமணம் நடந்த நிலையில் சின்ன திரையுலகினர் குவிந்து