தளபதிக்கு அன்பை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு.. யுவனின் நெகிழ்ச்சியான பதிவு..!

  • IndiaGlitz, [Thursday,September 05 2024]

தளபதி விஜய்க்கு எனது அன்பை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நெகிழ்ச்சியான பதிவை செய்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ’கோட்’ திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படம் நிச்சயம் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’கோட்’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சூப்பராக இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் யுவன் சங்கர் ராஜா சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து ஒரு பதிவை தெரிவித்துள்ளார்.

அனைத்து ரசிகர்களுக்கும் எனது நன்றி, தளபதி விஜய்க்கு எனது அன்பை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்த ஏஜிஎஸ் அகோரம் அவர்கள், அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் ஆகியவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது சகோதரர் வெங்கட் பிரபு இல்லாவிட்டால் நிச்சயமாக இது நடந்திருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.