தளபதிக்கு அன்பை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு.. யுவனின் நெகிழ்ச்சியான பதிவு..!

  • IndiaGlitz, [Thursday,September 05 2024]

தளபதி விஜய்க்கு எனது அன்பை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நெகிழ்ச்சியான பதிவை செய்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான ’கோட்’ திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்த படம் நிச்சயம் வசூல் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ’கோட்’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சூப்பராக இருப்பதாக படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் யுவன் சங்கர் ராஜா சற்று முன் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து ஒரு பதிவை தெரிவித்துள்ளார்.

அனைத்து ரசிகர்களுக்கும் எனது நன்றி, தளபதி விஜய்க்கு எனது அன்பை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்த ஏஜிஎஸ் அகோரம் அவர்கள், அர்ச்சனா கல்பாத்தி அவர்கள் ஆகியவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது சகோதரர் வெங்கட் பிரபு இல்லாவிட்டால் நிச்சயமாக இது நடந்திருக்காது என்றும் அவர் கூறியுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

More News

கோட்' படம் பார்க்க வரும் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்.. சூப்பர் அறிவிப்பு..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் இந்த படத்தை பார்க்க வரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை உலகநாயகன் கமல்ஹாசன்

அடடா இந்த கேரக்டரை மிஸ் பண்ணிட்டமே... நான் வாய்ப்பு தேடி இயக்குனர் வீட்டு வாசலுக்கு சென்றதில்லை

ஜே ஜே, கே.ஜி. எப் போன்ற தமிழ் படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், அண்ணி தமிழ் சீரியலிலும் நடித்து மிகவும் பிரபலமானவர் மாளவிகா அவினாஷ்.

வாழை பட நடிகை Divya Duraisamy உடன் ஆன்மீக உரையாடல்.!

வாழைப்பழம் படத்தின் நாயகி திவ்யா துரைசாமி, ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் தனது ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

தமிழ்ல படம் பண்ணாததுக்கு காரணமே இதுதான் - நடிகர் அவினாஷ்

எலந்தூர் நாராயண் ரவீந்திரா என்ற இயற்பெயர் உடையவர். அவரது மேடைப் பெயரான அவினாஷ் என்ற பெயரால் தென்னிந்திய திரைத்துறையில் நன்கு அறியப்பட்டவர்,

விஜய்யின் 'கோட்' பட டைட்டில் சனாதன கருத்தா? தமிழக எம்பியின் பதிவு..!

தளபதி விஜய் நடித்த 'கோட்' திரைப்படம் இன்று வெளியாகிய நிலையில் இந்த படத்திற்கு முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளியானதை அடுத்து இந்த படம் நிச்சயம் வசூலில் சாதனை செய்யும்