தந்தை ஆகிறார் யுவன்ஷங்கர் ராஜா?

  • IndiaGlitz, [Saturday,November 28 2015]

பிரபல இளம் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவுக்கு கடந்த ஜனவரி மாதம் துபாய் பெண் ஜாப்ரூன் நிஜார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது யுவன்ஷங்கர் ராஜா தந்தையாக போவதாக கூறப்படுகிறது.

36வயதான யுவன், முதல்முதலாக தந்தையாக போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இதுகுறித்து யுவனிடம் நீங்கள் தந்தையாக போகிறீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டபோது மறைமுகமாக 'ஆமாம்' என்று பதில் கூறியதாக தகவல்கள் கூறுகின்றன.

யுவன்ஷங்கர் ராஜா தற்போது ஹாலிவுட் படம் ஒன்றிலும், சீனுராமசாமி-விஜய்சேதுபதி இணையும் படம் ஒன்றிலும் இசையமைத்து வருகிறார்.

More News

'தெறி'யில் பஞ்ச் டயலாக்குகள் மற்றும் மாஸ் காட்சிகள் : அட்லி

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

ரஜினிமுருகன்' ரிலீஸ் தேதி. அதிகாரபூர்வ அறிவிப்பு

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட 'ரஜினிமுருகன்' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 4ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக...

ஜெமினிகணேசனுக்கு ஜோடியாகும் 'வேதாளம்' நடிகை

கோலிவுட்டின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான நடிகர் ஜீவா நடித்த 'யான்' திரைப்படம் கடந்த வருடம் வெளியாகி தோல்வி அடைந்தாலும்...

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி

இயக்குனர் இமயம் இயக்கிய 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் கடந்த 90கள் முதல் முன்னணி நடிகராக விளங்கிய நவரச நாயகன் கார்த்திக் நேற்று இரவு திடீரென உடல்நலமின்றி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது....

தெறியாக தொடங்கிய 'தெறி' வியாபாரம்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...