சர்ச்சை கேள்விக்கு யுவன்ஷங்கர் ராஜாவின் சாந்தமான பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா அவர்கள் தனது சமூக வலைதளத்தில் இஸ்லாம் மதம் குறித்து செய்த பதிவுக்கு நெட்டிசன்கள் பல்வேறு சர்ச்சைக்குரிய கேள்விகள் எழுப்பிய நிலையில் அந்த கேள்விகளுக்கு அவர் சாந்தமான முறையில் பதில் அளித்துள்ளார்
யுவன் சங்கர் ராஜா சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் குரான் வசனம் ஒன்றை பதிவு செய்தார். இந்த வசனத்திற்கு கமெண்ட்டுகளை பதிவு செய்த நெட்டிசன்கள் ’நீங்கள் யுவன்சங்கர்ராஜாவாக பிறந்ததால் தான் உங்களை நாங்கள் பின் தொடர்கிறோம் என்றும் இது மதத்தை பரப்பும் தளம் இல்லை என்றும் இதே ரீதியில் சென்றால் உங்கள் பக்கத்தில் இருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறியிருந்தார். இதற்கு யுவன் சங்கர் ராஜா ’வெளியேறி விடுங்கள்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்
இன்னும் ஒரு நெட்டிசன், ‘இதே கருத்தை நீங்கள் பகவத் கீதையை பார்க்கவில்லையா? என்று கேட்டதற்கு ’நான் நம்பும் ஒரு மதம் குறித்து பதிவு செய்வது எப்படி இன்னொரு மதத்தை மதிக்காமல் போவதாகும் என்றும் நாங்களும் தனிமனிதர்கள் தான் என்றும் எங்களுக்கும் உரிமைகள் உள்ளன என்றும், என் நம்பிக்கை என் உரிமை என்றும் பதிலளித்துள்ளார்
மேலும் இன்னொரு நெட்டிசன் ’புதிய மதத்திற்கு மாறிய நீங்கள் ஏன் பழைய பெயரை பயன்படுத்துகிறார்கள்? உங்கள் பெயரையும் மாற்றிக் கொள்ளலாமே’ என்ற கேள்விக்கு பதிலளித்த யுவன்சங்கர்ராஜா ’உங்களுக்கு நான் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதலில் நான் ஒரு இந்தியன், அதன் பின்னர் நான் ஒரு தமிழன். அதன்பிறகு நான் ஒரு இஸ்லாமியன். இஸ்லாமியர்கள் அரபு நாடுகளில் மட்டும் தான் இருக்கிறார்கள் என்று நினைத்தால் அது அவர்களுடைய அறியாமை. மதமும் இனமும் வெவ்வேறானவை. தேசியமும் மதமும் வெவ்வேறானவை. இந்த அடிப்படை விஷயத்தைக் கூட புரிந்து கொள்ளாதவர்களுக்கு வேறு எதுவும் புரியாது. தயவுசெய்து வெறுப்பு பிரச்சாரத்தை நிறுத்துங்கள். அமைதி நிலவட்டும்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.
சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு யுவன்சங்கர்ராஜா புத்திசாலித்தனமாகவும் சாந்தமாகவும் பதில் அளித்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments