மார்ச் 3ஆம் தேதி தயாராகுங்கள்: யுவன் அறிவிப்பு

மார்ச் 3ஆம் தேதி ஒரு அருமையான பாடலைக் கேட்க தயாராகுங்கள் என யுவன் சங்கர் ராஜா அறிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன்சங்கர்ராஜா பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் சமீபத்தில் பாடகி துவணி பானுஷாலி என்பவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் இருவருமே பிங்க் நிற உடைகளில் தோன்றினார் என்பதும் இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா மற்றும் துவணி பானுஷாலி இருவரும் பாடிய பாடல் மார்ச் 3ஆம் தேதி வெளியாக இருப்பதாக யுவன்சங்கர்ராஜா அறிவித்துள்ளார். மேலும் இது ஒரு தனிப்பாடலா? அல்லது ஏதாவது ஒரு திரைப்படத்திற்காக பாடிய பாடலா? என்பதும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்த வீடியோவை யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பதும், இந்தப் பாடலை எதிர்நோக்கி அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.