'நானே வருவேன்' அப்டேட் கொடுத்த யுவன்: குஷியில் தனுஷ் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் ’நானே வருவேன்’ என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் ’நானே வருவேன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதனை அடுத்து தனுஷ் மற்றும் செல்வராகவன் ரசிகர்கள் குஷியாகினர் என்பதும், சமூக வலைதளங்களில் இதுகுறித்த ஹேஷ்டேக் வைரலானது என்பதும் குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில் ’நானே வருவேன்’ திரைப்படத்தின் அப்டேட்டை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் கொடுத்த ஒருசில மணி நேரத்தில் இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். இந்த படத்தின் இரண்டாவது பாடலை கம்போஸ் செய்து கொண்டிருப்பதாகவும் இந்த பாடலை கேட்க ரசிகர்கள் அனைவரும் விரைவில் தயாராக இருங்கள் என்றும் தெரிவித்துள்ளார். அப்படி என்றால் ஏற்கனவே இந்த படத்திற்காக ஒரு பாடலை அவர் கம்போஸ் செய்து முடித்து விட்டார் என்று தெரியவருகிறது. இந்த அப்டேட் யுவன் ரசிகர்களையும் சேர்த்து உற்சாகமாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன் சங்கர் ராஜா கூட்டணி இணைவதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Working on the second song :) can't wait for you guys to hear it! https://t.co/K2ALUjRDzw
— Raja yuvan (@thisisysr) June 23, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments