'அருவி' தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் யுவன்ஷங்கர் ராஜா
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட் திரையுலகில் சமீபகாலமாக தரமான மற்றும் வெற்றி படங்களை தயாரித்து வரும் நிறுவனங்களில் ஒன்று ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். இந்நிறுவனம் சமீபத்தில் தயாரித்த 'தீரன் அதிகாரம் ஒன்று' மற்றும் 'அருவி' ஆகிய இரண்டு படங்களுமே அனைத்து தரப்பினர்களும் பாராட்டும் வகையில் இருந்தது. மேலும் இந்த படங்கள் பாக்ஸ் ஆபீசிலும் சாதனை செய்தது
இந்த நிலையில் இந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், அந்த படத்தை செல்வராகவன் இயக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இந்த படத்தில் இசையமைக்க யுவன்ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளதாக ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் செல்வராகவன் - யுவன்ஷங்கர் ராஜா வெற்றி கூட்டணி மீண்டும் இணைவதில் தனக்கு மகிழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார்.
சூர்யாவின் 36வது படமான இந்த படத்தில் ரகுல் ப்ரித்திசிங் மற்றும் சாய்பல்லவி ஆகிய இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனர். மற்ற நட்சத்திரங்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தேர்வு செய்யும் பணி நடந்து வருவதாகவும், மிக விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout