பிரபல யூடியூபர்கள் ராம்-ஜானு திருமண நிச்சயதார்த்தம்: வைரல் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
யூடியுப் மூலம் பிரபலமான ராம் மற்றும் ஜானு ஆகியோர் நீண்ட காலம் காதலித்து தற்போது தங்கள் காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். ராம்-ஜானுவின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது என்பதும் அது குறித்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
யூடியூபில் பிரபலமான ராம்-ஜானு கல்லூரி காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பதும் அதன் பின் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஒரே இடத்தில் பணி செய்து கொண்டிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய காதலுக்கு இருதரப்பு வீட்டிலும் கடும் எதிர்ப்புகள் இருந்ததால் சில ஆண்டுகள் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து கொள்ளாமல் போன் மூலம் மட்டுமே பேசியுள்ளனர். அதன்பின் இவர்கள் இருவரும் இணைந்து ஆரம்பித்த யூடியூப் சேனல் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இருதரப்பு குடும்பத்தினர்களும் இவர்கள் இருவரும் இணைந்தால் வாழ்க்கையில் முன்னேறுவார்கள் என்ற நம்பிக்கை வந்துள்ளது.
இருதரப்பு வீட்டில் உள்ளவர்கள் சமாதானமாகி பச்சை கொடி காட்டும் வரை பொறுமை காத்து தற்போது குடும்பத்தினரின் சம்மதத்தோடு நிச்சயதார்த்தத்தை நிகழ்த்தியுள்ளனர். கல்லூரி காலத்தில் இருந்து திட்டமிட்டு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று யூட்யூபில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் வைத்துள்ள இந்த ஜோடி மேலும் பல மடங்கு வாழ்க்கையில் முன்னேற நாம் அனைவரும் வாழ்த்துவோம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments