"ஆணழகன் மதன் இல்ல, இது அங்கிள் மதன்...! கதறும் குமார் kannis...!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆபாச பேச்சு பேசியே கோடிக்கணக்கில் சம்பாதித்த, மதனின் நிலை தற்போது பரிதாபமாக மாறியுள்ளது.
இணையத்தில் பெரிய மன்மதன் போன்று தன் முகத்தை காண்பித்துக்கொண்டு, கைதான பின் அவரின் உண்மை முகத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு போலீசுக்கு கெத்தாக சவால் விட்டு வீடியோ பதிவிட்ட மதனை, கொத்தாக கைது செய்துள்ளனர் சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர்.
ஆடி காரின் முன் நின்று போஸ் கொடுத்தும், கூலிங் கிளாஸ் போட்டு ஹீரோ மாதிரி பந்தா காட்டியும், ஜிம் பாடி போல தோற்றமளித்தும், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளான் ஆபாச மதன். ஆனால் கைதுக்கு பின் முகத்தில் தொப்பையும், வயிற்றில் தொந்தியுமாக தெரியும் மதனை பார்த்து வாயடைத்துப்போயுள்ளனர் அவர் ரசிகர்கள். இணையத்தில் பழகுபவர்கள், நிஜத்தில் தோற்றத்திலும், குணத்திலும் முற்றிலுமாக வேறு மாதிரியாக இருப்பார்கள் என்பதற்கு மதன் சிறந்த எடுத்துக்காட்டு. இதெல்லாம் ஒருவேளை போட்டோஷாப் -ஆக இருக்கும் எனவும் நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை கூறி வருகின்றனர். மதனின் தற்போதைய புகைப்படத்தை பார்த்த மீம் கிரியேட்டர்ஸ் பலரும் அவரை கிண்டல் செய்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மதன் குறித்த செய்திகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பார்த்த மதன் ரசிகர்கள், இன்னும் அவனுக்கு ஜால்ரா தட்டி வருகிறார்கள். மதனை காவல் துறையினர் சேலம் அழைத்து வருகிறார்கள் என்று அறிந்ததும், அவன் ரசிகர்கள் வீட்டின் முன் வந்து குவிந்துள்ளனர். இதற்கு காரணம் அவனுடன் போட்டோ எடுக்கவோ, ஆட்டோகிராஃப் வாங்கவோ இல்லை, இவ்வளவு நாள் காவல் துறையை ஏமாற்றி முகத்தை மறைத்து வந்த பப்ஜி மதன் யார் என்று பார்க்கத்தான். அதில் பெரும்பாலான ரசிகர்கள் சிறுவர்களே. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து இன்னும் மதன் நல்லவர் என அவனது ரசிகர்கள் பல வீடியோக்களில் கமெண்டுகளை பதிவிட்டு கதறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com
Comments