"ஆணழகன் மதன் இல்ல, இது அங்கிள் மதன்...! கதறும் குமார் kannis...!

  • IndiaGlitz, [Sunday,June 20 2021]

ஆபாச பேச்சு பேசியே கோடிக்கணக்கில் சம்பாதித்த, மதனின் நிலை தற்போது பரிதாபமாக மாறியுள்ளது.

இணையத்தில் பெரிய மன்மதன் போன்று தன் முகத்தை காண்பித்துக்கொண்டு, கைதான பின் அவரின் உண்மை முகத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு போலீசுக்கு கெத்தாக சவால் விட்டு வீடியோ பதிவிட்ட மதனை, கொத்தாக கைது செய்துள்ளனர் சென்னை சைபர் கிரைம் காவல் துறையினர்.

ஆடி காரின் முன் நின்று போஸ் கொடுத்தும், கூலிங் கிளாஸ் போட்டு ஹீரோ மாதிரி பந்தா காட்டியும், ஜிம் பாடி போல தோற்றமளித்தும், இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளான் ஆபாச மதன். ஆனால் கைதுக்கு பின் முகத்தில் தொப்பையும், வயிற்றில் தொந்தியுமாக தெரியும் மதனை பார்த்து வாயடைத்துப்போயுள்ளனர் அவர் ரசிகர்கள். இணையத்தில் பழகுபவர்கள், நிஜத்தில் தோற்றத்திலும், குணத்திலும் முற்றிலுமாக வேறு மாதிரியாக இருப்பார்கள் என்பதற்கு மதன் சிறந்த எடுத்துக்காட்டு. இதெல்லாம் ஒருவேளை போட்டோஷாப் -ஆக இருக்கும் எனவும் நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை கூறி வருகின்றனர். மதனின் தற்போதைய புகைப்படத்தை பார்த்த மீம் கிரியேட்டர்ஸ் பலரும் அவரை கிண்டல் செய்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகிறார்கள்.

மதன் குறித்த செய்திகளை ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பார்த்த மதன் ரசிகர்கள், இன்னும் அவனுக்கு ஜால்ரா தட்டி வருகிறார்கள். மதனை காவல் துறையினர் சேலம் அழைத்து வருகிறார்கள் என்று அறிந்ததும், அவன் ரசிகர்கள் வீட்டின் முன் வந்து குவிந்துள்ளனர். இதற்கு காரணம் அவனுடன் போட்டோ எடுக்கவோ, ஆட்டோகிராஃப் வாங்கவோ இல்லை, இவ்வளவு நாள் காவல் துறையை ஏமாற்றி முகத்தை மறைத்து வந்த பப்ஜி மதன் யார் என்று பார்க்கத்தான். அதில் பெரும்பாலான ரசிகர்கள் சிறுவர்களே. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதைத்தொடர்ந்து இன்னும் மதன் நல்லவர் என அவனது ரசிகர்கள் பல வீடியோக்களில் கமெண்டுகளை பதிவிட்டு கதறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சசிகலா "தாய் இல்ல பேய்"....! காரசாரமாக பேசிய நத்தம் விஸ்வநாதன்.....!

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நத்தம்  விஸ்வநாதன்  சசிகலா குறித்து மிகவும் காட்டமாக பேசியுள்ளார்.

ரகசிய இடத்தில், மாஜி அமைச்சர் மணிகண்டன் கைது...!

நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில், தலைமறைவாகி இருந்த அமைச்சர் மணிகண்டனை

கொரோனா உயிரிழப்புகளை அறிய வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள்....! சீமான் வேண்டுகோள்...!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த தொற்றால் உயிரிழப்பவர்களின் உண்மை நிலவரத்தை மக்கள் தெரிந்து கொள்ள,

இந்த புகைப்படத்தில் தனுஷ் பட நாயகி இருக்கின்றார்: கண்டுபிடியுங்கள் பார்ப்போம்!

இந்த லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கும் நடிகர் நடிகைகள் தங்களுடைய பழைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகின்றனர் என்பதும்

தந்தையர் தினத்தில் நதியா வெளியிட்ட அசத்தலான புகைப்படம் வைரல்!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 20ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் அன்றைய தினம் திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் தங்களுடைய சமூக வலைதளங்களில்