close
Choose your channels

கையில் சூலத்துடன் பைக்கில் வீலிங்.. TTF வாசன் அறிமுகமாகும் படத்தின் போஸ்டர்..!

Thursday, June 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யூடியூப் மூலம் பிரபலமான TTF வாசன் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் அவரது பிறந்த நாளில் அந்த படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்றும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சற்றுமுன் அவர் நடிக்கும் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கோவையை சேர்ந்த TTF வாசன் அதிவேகமாக பைக் ஓட்டி அதன் வீடியோவை லைவ்வாக யூடியூபில் பதிவு செய்வது வழக்கம். அவர் பலமுறை போக்குவரத்து விதிகளை மீறியதாக காவல் துறையினர்களிடம் அபராதம் கட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணம் என பலர் அவரது செயல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று TTF வாசன் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அவர் நடிக்கும் முதல் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது.
‘மஞ்சள் வீரன்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டரில் கையில் சூலத்துடன் பைக்கில் வீலிங் செய்வது போல் உள்ளது.

இந்த படத்தை செல்அம்’ என்பவர் இயக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு மணிக்கு 299 கிலோமீட்டர் வேகத்தில் ஆரம்பம் ஆகிறது என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment