உன் பொண்டாட்டி போட்டோவ மார்பிங் செய்து போடட்டுமா...? மிரட்டும் சுப்புலட்சுமி...!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2 வாரங்களாகவே ரவுடி பேபி சூர்யா என்ற சுப்புலட்சுமி குறித்த செய்திகள் தான் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிக்கொண்டிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் ஆபாசமாக செய்கைகள் செய்தும், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரையும் கெட்ட வார்த்தையில் திட்டியும், மது அருந்திவிட்டு அராஜகம் செய்து பிரபலமானவர் இந்த சுப்புலட்சுமி. இதனால் சமூக ஆர்வலர்கள் பலரும் இவர் மீது காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர். இதையடுத்து பெண்களை கட்டாயப்படுத்தி, வெளிநாடுகளுக்கு கூட்டிச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகவும், பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்திருந்தனர். இதுகுறித்த ஆடியோ ஒன்று அண்மையில் வெளியானது.
இந்நிலையில் ஆதாரத்தை வெளியிட்டவர்களை சுப்புலட்சுமி மிரட்டும், ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில்
"உங்க இரண்டு பேரோட போட்டோவை எடுத்து மார்பிங் செய்து பேஸ்புக், யுடியூப் போன்ற சோஷியல் மீடியால வெளிய விடுவன். நீங்க தானா உங்க போன சுவிட்ச் ஆப் செய்ற நிலைமை வரும். உன்னோட பிசினஸ் பாதிக்கவச்சு, மான மரியாதைய காத்தில பறக்கும். தைரியம் இருந்தா உன் பொண்டாட்டியை போய் போலீஸ் ஸ்டேசன்ல புகார் கொடுக்க சொல்லு. நீங்க உங்க வேலைய தொடர்ந்து செய்யணும்னா அவ என்கிட்டே மன்னிப்பு கேட்கணும். இல்லனா வர்ற பிரச்சனையா பாத்துக்கலாம்-னா போய் புகார் கொடுங்க. உன் பொண்டாட்டி போட்டோ மற்றும் நம்பரை டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யுடியூப் போட்டு, அணுகவேண்டிய முகவரி-னு போட்றுவன். என் லாயர் கிட்ட நான் எல்லாம் பேசிட்டேன். காலைல 12 மணிக்குள்ள மன்னிப்பு கேட்கலான, என்னென்ன பண்ணணுமோ, அதெல்லாம் பண்ணுவோம், அவரசர பட்டு உன் பொண்டாட்டியை பேச விட்டுடியே. இனி ஒரு வாரத்துக்கு அவ போட்டோ தான் யுடியூப்-ல ஓடும். இத ரெக்கார்ட் செய்து வச்சுக்க, போலீஸ் கிட்ட காமிக்க தோதா இருக்கும்" என பெரிய தாதா போல, பகிரங்கமாக மிரட்டுகிறார் அந்த வயசான பேபி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments